Latest News :

பெண்கள் குறித்து தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் - விஜய் கோரிக்கை
Thursday August-10 2017

விஜய் நடிப்பில் உருவாகும் ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்றுள்ள “ஆளப்போறான் தமிழன்...” என்ற பாடல் இன்று வெளியாக உள்ள நிலையில், நேற்று இரவு விஜய் திடீரென்று பெண்கள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

 

அதில், சமுதாயத்தில் பெண்களை அதிகம் மதிப்பவன் நான், யாருடைய திரைப்படத்தையும், யாரும் விமர்சிப்பதற்கு கருத்து சுதந்திரம் உண்டு. எக்காரணம் கொண்டும், எந்த நேரத்திலும், பெண்களை இழிவாகவோ, தரக்குறைவாகவோ, விமர்சிக்க கூடாது என்பது எனது கருத்தாகும்.

 

அனைவரும் பெண்மையை போற்ற வேண்டும். யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில், சமூக இணையதளங்களில் பெண்கள் மீது தவறான கருத்துக்களை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொள்கிறேன், என்று தெரிவித்துள்ளார்.

Related News

181

’லாரா’ படத்தின் தலைப்பு போஸ்டரை வெளியிட்ட நடிகர் சத்யராஜ்!
Saturday June-15 2024

'நாக்குக்கு நரம்பில்லை . எதை வேண்டுமானாலும்  பேசும்' என்பார்கள்...

”டிஜிட்டல் தளங்களில் படைப்பு சுதந்திரம் இல்லை” - ’கருடன்’ வெற்றி விழாவில் வெற்றிமாறன் பேச்சு
Saturday June-15 2024

இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கத்தில், சூரி நாயகனாகவும், சசிகுமார் மற்றும் உன்னி முகுந்தன் முக்கிய வேடங்களில் நடிக்க, கடந்த மாதம் வெளியான ‘கருடன்’ விமர்சன ரீதியாகவும், வியாபார ரீதியாகவும் வரவேற்பை பெற்று திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...