விஷால் தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் மூலம் தயாரித்து நடிக்கும் படம் ‘இரும்புத்திரை’. சமந்தா ஹீரோயினாக நடித்துள்ள இப்படத்தில் அர்ஜுன் வில்லனாக நடித்திருக்கிறார். மித்ரன் என்ற அறிமுக இயக்குநர் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது. இதில் விஷாலின் அப்பா ஜி.கே.ரெட்டி, அம்மா லட்சுமி தேவி, இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா, இயக்குநர்கள் மித்ரன், லிங்குசாமி, ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள் சத்யஜோதி தியாகராஜன், கதிரேசன், நடிகை குட்டி பத்மினி, நடிகர் ராஜ்கிரண் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில், கிட்னி நோயால் பாதிக்கப்பட்ட தந்தையின் மகனான விஷால் வர்ஷனுக்கும், கேன்சர் நோயால் பாதிக்கப்பட்ட தந்தையின் மகளான என்.மகாலட்சுமியின் கல்விக்கும் உதவும் வகையில் விஷாலின் தாயார் லட்சுமி தேவி அவர்கள் நன்கொடை வழங்கினார்.
நிகழ்ச்சியில் விஷால் பேசும் போது, ”சமூக பிரச்னையை பற்றி படத்தில் பேசும் போது அது மிகப்பெரிய அளவில் வெற்றிபெறும். யுவன் ஷங்கர் ராஜா என்னுடைய குடும்ப நண்பர். அவருடைய இசை எனக்கு மிகவும் பிடிக்கும். யுவன் இசையில் பாடல் நன்றாக வந்துள்ளது. படத்தின் பின்னணி இசைக்காக காத்துக்கொண்டிருக்கிறேன். இரும்புத்திரை மிகப்பெரிய ஊழலை பற்றி பேசும் திரைப்படம். அதை இந்திய இராணுவத்தோடு சம்பந்தப்படுத்தி எழுதி இயக்கியுள்ளார் இயக்குநர் மித்ரன். இப்படத்தில் இடம்பெறும் ஊழல் எல்லோருடைய வாழ்விலும் நடைபெற்ற ஒன்றாக இருக்கும். இப்படம் தாமதமாக வெளியாவதற்கு நான்தான் காரணம், அதற்கு மனிப்பு கேட்டு கொள்கிறேன். இந்த டிஜிட்டல் யுகத்தில் இரும்புத்திரை முக்கியமான திரைப்படம். இப்படத்தில் வரும் பிரச்னையை என்னுடைய தந்தையும் தன் வாழ்வில் சந்தித்துள்ளார். என்னுடைய தந்தை போல் எனக்கும் மிலிட்டரி ஆபிசர் ஆக வேண்டும் என்ற ஆசை இருந்தது. இப்போது இந்த படத்தில் இராணுவ வீரனாக நடித்துள்ளேன். மக்களுக்கு நல்லது செய்யுற அனைவரும் அரசியல்வாதிகள் தான். இரும்புத்திரை என்னுடைய 24வது திரைப்படம். என்னுடைய அனைத்து படங்களுக்கும் ஆதரவு அளித்ததற்கு நன்றி.” என்றார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...