விஷால், மீரா ஜாஸ்மீன், ராஜ்கிரன் ஆகியோரது நடிப்பில், லிங்குசாமி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற ‘சண்டைகோழி’ படத்தின் இரண்டாம் பாகமான ‘சண்டைகோழி-2’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
விஷாலின் 25 வது படமான இப்படத்தை விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கிறது.
இந்த நிலையில், இப்படத்திற்காக சென்னை பின்னி மில்லியில் மதுரையை செட் மூலம் உருவாக்கும் பணியில் படப்பிடிப்பு குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மொத்தம் 10 ஏக்கர் நிலபரப்பில், 500 கடைகள், கோவில், திருவிழா கொண்டாட்டம் என அழகான மதுரையை ரூ.6 கோடி செலவில் வடிவமைப்பதில் இறங்கியுள்ளார்கள்.
இதற்கான பூஜை இன்று காலை பின்னி மில்லில் நடைபெற்றது. இதில், விஷால் பிலிம் பேக்டரி இணை தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகானந்தம், இயக்குநர் என்.லிங்குசாமி, கலை இயக்குநர் ராஜீவன் ஆகியோர் கலந்துக்கொண்டு பணியை தொடங்கி வைத்தார்கள்.
தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத சில நடிகர்கள் சரியான வாய்ப்புகள் கிடைக்காததால் தங்களுக்கான அங்கீகாரம் கிடைக்காமல் தடுமாறினாலும், கிடைக்கும் வாய்ப்புகளில் தங்களது திறமைகளை நிரூபித்து எந்த வேடமாக இருந்தாலும் அதில் தங்களது முத்திரையை பதித்து வருகிறார்கள்...
முன்னணி இசையமைப்பாளர் மற்றும் நடிகராக பயணிக்கும் ஜிவி பிரகாஷ் குமார், இசையமைப்பாளராக 2025 ஆம் ஆண்டில் 100 தொடுகிறார்...
1999ல் வெளியான ‘சேது’ படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அடியெடுத்து வைத்து இந்த 25 வருடங்களில் தமிழ் சினிமாவின் அடையாளமாகவே மாறிப்போனவர் இயக்குநர் பாலா...