செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன் நடிக்க இருக்கிறார். இந்த தகவலை கிண்டல் செய்யும் விதமாக சன் டிவி நிகழ்ச்சி ஒன்றில் தொகுப்பாளினிகள் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சூர்யாவை இப்படி கிண்டல் செய்ததற்கு பல நடிகர், நடிகைகள் டிவிட்டரில் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில், நேற்று சூர்யா ரசிகர்கள் சன் டிவி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
இந்த நிலையில், சூர்யாவை கிண்டல் செய்ததற்காக நடிகர் சங்கம் சார்பில் சன் டிவிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நடிகர் சங்க செயலாளர் விஷால் கையெழுத்தோடு அனுப்பப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் கூறியிருப்பதாவது:
சமீபத்தில் உங்களது சேனலில் வெளியான சினிமா தொடர்பான நிகழ்ச்சியில் எங்கள் நடிகர் சங்கத்தின் மதிப்பிற்குரிய மூத்த உறுப்பினர் திரு.சூர்யாவின் உருவ அமைப்பைப் பற்றி கேலி செய்யும் விதமாக இரு இளம் பெண்கள் பேசிய தொகுப்பு வெளியானது. தனிப்பட்ட ஒருவரை பற்றி இதைப் போன்ற அநாகரிகமான தேவையற்ற விமர்சனங்கள் வெளியாவது உங்களைப் போன்ற சேனல்களுக்கு பொருத்தமானது அல்ல.
சட்டத்தின்படி, இதுர சராசரி குடிமக்களை போல் ஒரு நடிகருக்கும், அவரது தனிப்பட்ட வாழ்க்கை, நாகரிகம், அடிப்படை மரியாதையுடன் கூடிய சம அளவிலான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்பதை நாங்கள் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். எனவே மேற்கண்ட காட்சியை வெளியிட தங்களது நிறுவனம் அனுமதித்திருக்க கூடாது என கருதுகிறோம்.
ஊடகத்துறையில் எங்களது நீண்டகால கூட்டாளி என்னும் வகையில் உங்களது சன் குழும நிகழ்ச்சிகளில் எங்களது பணிகளைப் பற்றிய ஆக்கப்பூர்வமான - அநாகரிகமான எவ்வித விமர்சனங்களையும் வரவேற்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால், எங்களது மூத்த உறுப்பினரும், மரியாதைக்குரிய நடிகருமான ஒருவரை காயப்படுத்தும் வகையில், அர்த்தமில்லாத இதைப்போன்ற நிகழ்ச்சிகளை நாங்கள் சகித்துக் கொள்ளவோ, மன்னிக்கவோ முடியாது என்பதை தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
மேற்கண்ட நிகழ்ச்சி ஒளிபரப்புக்கு காரணமானவர்கள் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், இதுபோன்ற கசப்பான காட்சிகள் உங்களது குழுமத்திற்கு சொந்தமான சேனல்களில் இனி ஒளிபரப்பாகாது என்ற உத்தரவாதத்தை நீங்கள் அளிப்பீர்கள் என வலியுறுத்துகிறோம்.
நமக்கிடையேயான உறவில் கறைபடியாத வகையில் உடனடியாக, இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என நம்புகிறோம்.
இவ்வாறு அந்த நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...