தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மலேசியாவில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த கலை நிகழ்ச்சி குறித்து பல்வேறு விமசனங்களும், குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது. இதேபோல், விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்த போதும், இப்படி ஒரு கலை நிகழ்ச்சியை நடத்தி சங்கத்தின் கடனை அடைத்தார்.
விஜயகாந்த் கலை நிகழ்ச்சி நடத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்ட போது, அவரை பார்த்து ரஜினிகாந்த் பயந்த தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
கலை நிகழ்ச்சிக்காக முன்னணி நடிகர் நடிகைகளை நேரில் சந்தித்து அழைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த விஜயகாந்த், ரஜினியையும் சந்திக்க சென்றாராம். அப்போது, ரஜினிகாந்த் பாபா படப்பிடிப்பில் இருந்த போது, அங்கே சென்ற விஜயகாந்த், காரில் இருந்து இறங்கியதும் ரஜினியை நோக்கி வேகமாக நடந்தாராம். இவரை தூரத்திலிருந்து பார்த்த ரஜினிகாந்த் பயந்தே விட்டாராம். பிறகு தான் விஜயகாந்த் என்று தெரிந்ததாம்.
விஜயகாந்த், ரஜினியிடம் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள வேண்டும், என்று சொன்னதும் உடனே சரி என்று சொன்னவர், கண்டிப்பாக வருகிறேன், என்பதையே பல முறை சொன்னாராம்.
இந்த தகவலை நடிகர் டெல்லி கணேஷ், சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...