வில்லன், ஹீரோ, குணச்சித்திர வேடம் என்று தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி பாதை அமைத்துக் கொண்ட மன்சூரலிகான், தமிழ் மட்டும் இன்றி பிற மொழி திரைப்படங்களிலும் நடித்து சுமார் 250 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பதோடு, ஏராளமான படங்களை தயாரித்தும் இயக்கியும் இருக்கிறார்.
அடுத்ததாக அவரது ராஜ்கென்னடி பிலிம்ஸ் பட நிறுவனம் சார்பில் எழுதி இயக்கி, தயாரிக்கும் படம் ‘கடமான்பாறை’. இதில் ஹீரோவாக மன்சூரலிகானின் மகன் அலிகான் துக்ளக் அறிமுகமாகிறார். கதாநாயகியாக அனுராகவி நடிக்கிறார். மற்றொரு நாயகியாக ஜெனி பெர்ணாண்டஸ் நடிக்கிறார். மற்றும் சிவசங்கர், சார்மிளா, கனல் கண்ணன், முல்லை, கோதண்டம், கலக்கப் போவது யாரு பழனி, பயில்வான் ரங்கநாதன் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் மன்சூரலிகான் சிங்கம், புலி, கரடி, சிறுத்தை மாதிரி வாழும் மனிதனாக நடிக்கிறார்.
மகேஷ்.டி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ரவிவர்மா இசையமைக்க, சொற்கோ, ரவிவர்மா, மன்சூரலிகான் ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். ஜெயகுமார் கலைத் துறையை கவனிக்க, சந்துரு, சிவா, ஜெயா, சம்பத்ராஜ் ஆகியோர் நடனம் அமைக்கிறார்கள். ராக்கி ராஜேஷ் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்க, ஜெ.அன்வர் தயாரிப்பு நிர்வாகத்தை கவனிக்கிறார்.
விறுவிறுப்பாக இப்படத்தின் படப்பிடிப்பை நடத்தி வரும் மன்சூரலிகான், அப்படியே தனது மகனுக்காக பெண் தேடி வருகிறார். ஆம், இப்படத்தில் இடம்பெறும் இரண்டு பாடல்களுக்கு நடனமாட, நாயகன் அலிகான் துக்ளக்கிற்கு இணையான மற்றொரு நாயகியை மன்சூர் தேடி வருகிறார். அந்த நாயகி கிடைத்தவுடம், அந்த பாடல்களையும் படமாக்கி முடித்துவிட்டால், முழு படமும் முடிந்துவிடுமாம்.
செல்போன், மார்டன் டெக்னாலஜி என்று தவறான பாதையில் செல்லும் கல்லூரியில் படிக்கும் இளைஞர்களின் வாழ்க்கை எப்படி பாதிக்கப்படுகிறது என்பதை நகைச்சுவை மற்றும் திரில்லர் கலந்து சொல்லியிருப்பதே ‘கடமான்பாறை’ படத்தின் கதையாகும்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...