தமிழர் நலம் கலை பண்பாட்டு இயக்கம் என்ற நிறுவனம் தயாரிக்கும் படம் ‘முந்திரிக்காடு’. இதில் சீமான் போலீஸ் அதிகாரியாக கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நாயகனாக புகழ் என்பவர் அறிமுகமாகிறார். இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சி.மகேந்திரனின் மகன். கதாநாயகியாக சுபபிரியா நடிக்கிறார். மற்றும் ஜெயராவ், சோமு, சக்திவேல், ஆம்பல்திரு, கலைசேகரன், பாவா லட்சுமணன் ஆகியோரும் நடிக்கிறார்கள்.
மு.களஞ்சியம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் இப்படத்திற்கு ஜி.ஏ.சிவசுந்தர் ஒளிப்பதிவு செய்ய, ஏ.கே.பிரியன் இசையமைக்கிறார். 17 வயது இளைஞரான இவர் ஏ.ஆர்.ரஹ்மானின் இசைப்பள்ளியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கவிபாஸ்கர் பாடல்கள் எழுத, எல்.வி.கே.தாஸ் எடிட்டிங் செய்கிறார். மயில் கிருஷ்ணன் கலைத் துறையை கவனிக்க, லீ முருகன் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்கிறார். தயாரிப்பு மேற்பார்வையை டி.ஜி.ராமகிருஷ்ணன் கவனிக்கிறார்.
முந்திரிக்காட்டு மக்களின் வாழ்க்கை யதார்த்தத்தை பிரதிபலிக்கும் இப்படத்தில், விலை உயர்ந்த பொருளாக மாறிப்போன முந்திரியின் விளை நிலங்களில் சிந்தும் ஏழ்மையில் வியர்வை துளி எப்படிப்பட்டது என்பதையும் படத்தில் பதிவு செய்துள்ளார்களாம்.
இந்த படத்தின் பஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வெளியிட்டுள்ளார். இதில் இயக்குநர் மு.களஞ்சியம், படத்தின் நாயகன் புகழ், நாயகி சுபபிரியா, இசையமைப்பாளர் ஏ.கே.பிரியன், ஒளிப்பதிவாளர் ஜி.ஏ.சிவசுந்தர், நடிகர் கலைசேகரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...