தமிழ் சினிமாவின் டிரெண்டுக்கு ஏற்றவாறு படம் எடுப்பதோடு, இளசுகளின் மனசை புரிந்துக்கொண்டு அவர்களுக்கு ஏற்றவாறு படம் எடுத்து ஜெயிக்கும் இயக்குநர்களில் ஆர்.மாதேஷும் ஒருவர். விஜயின் ‘மதுரை’, விஜயகாந்தின் ‘அரசாங்கம்’உள்ளிட்ட பல மாஸ் வெற்றிப் படங்களை கொடுத்தவர் ‘சாக்லெட்’ உள்ளிட்ட இளைஞர்களுக்கான படங்களையும் கொடுத்திருக்கிறார். மொத்தத்தில், சினிமா ரசிகர்களுக்கான படங்கள் கொடுப்பதில் வல்லவரான இவரது இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் தான் ‘மோகினி’.
தற்போதைய தமிழ் சினிமாவின் டிரெண்டிற்கு ஏற்ற திகில் படம் தான் மோகினி என்றாலும், மற்ற திகில் படங்களில் இருந்து கதையிலும், காட்சி அமைப்பிலும் வித்தியாசத்தைக் காட்டும் படமாக மட்டும் இன்றி, ரசிகர்களை பிரமிக்க வைக்கும் ஒரு பிரம்மாண்ட திகில் படமாகவும் இப்படம் உருவாகியுள்ளது.
தமிழகத்தின் கனவு கண்ணியாக திகழும் திரிஷாவை திகில் கண்ணியாக மாற்றிய இயக்குநர் மாதேஷ், படம் குறித்து நம்மிடையே பேசிய போது, “இதுவரை நான் இயக்கிய படங்களில் ‘மோகினி’ மிகப்பெரிய படமாஜ உருவாகியுள்ளது. ரசிகர்கள் எப்போது, எந்த மாதிரியான படத்தை கொடுக்க வேண்டுமோ அந்த மாதிரியான படத்தை கொடுக்க வேண்டும் என்பதில் நான் ரொம்பவே கவனமாக இருப்பேன், அந்த வகையில் தான் ‘மோகினி’ படத்தையும் இயக்கியிருக்கிறேன்.
திகில் படமாக இருந்தாலும், கதையிலும் காட்சி அமைப்பிலும் மற்ற திகில் படங்களில் இருந்து வேறுபட்டு இருக்கும். அதேபோல், இப்படத்தின் 80 சதவீத காட்சிகள் லண்டன் உள்ளிட்ட பல வெளிநாடுகளில் படமாக்கியிருக்கிறோம். கதை லண்டனில் நடைபெறுவது போல அமைக்கப்பட்டிருப்பதால், லண்டனுக்கு சென்றோம். லண்டனில் மட்டும் படப்பிடிப்பை நடத்தாமல், பிரம்மாண்டத்தை காட்டுவதற்காக பலவிதமான லொக்கேஷன்களில் படப்பிடிப்பை நடத்தினோம். கதை லண்டனில் நடந்தாலும், படத்தில் வரும் திகில் மற்றும் அதை ஒட்டி வரும் காட்சிகள் நம்ம தமிழ் ரசிகர்களின் உணர்வை ஒட்டி தான் இருக்கும்.” என்றவரிடம், எதற்காக திரிஷாவை தேர்வு செய்தீர்கள், என்று கேட்டதற்கு, “படத்தில் திகில் காட்சிகள் மட்டும் அல்ல, அதிரடியான ஆக்ஷன் காட்சிகளும் உண்டு.
ஹீரோயின் ஆக்ஷன் காட்சியில் ஈடுபடும்போது அதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும், திரிஷா அதற்கு மிகச்சரியானவராக இருப்பார். அவர் இந்த படத்திற்காக ரொம்ப கஷ்ட்டப்பட்டிருக்கிறார். பல அடி உயரத்தில் இருந்து தொங்கியபடியெல்லாம் நடித்திருக்கிறார். ஆனால், எந்தவித தயக்கமும் இன்றி அவர் பெரிய அளவுக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார். மாஸ் ஹீரோ என்னவெல்லாம் செய்வார்களோ அதை அனைத்தையும் திரிஷா இந்த படத்தில் செய்திருக்கிறார்.
திகில் என்ற எசன்ஸை வைத்துக்கொண்டு ஒரு மாஸ் கமர்ஷியல் படத்தை தான் நான் எடுத்திருக்கிறேன். விஜய் போன்ற மாஸ் ஹீரோக்களை வைத்து எப்படிப்பட்ட படம் எடுத்தோனோ, அதுபோல தான் திரிஷாவை வைத்து இந்த படத்தை எடுத்திருக்கிறேன். திகில் என்பது ஒரு எசன்ஸ் தான் அதைவைத்துக் கொண்டு அமைக்கப்பட்டிருக்கும் திரைக்கதை, அதை படமாக்கிய விதம், விஷுவல் எபெக்ட்ஸ் உள்ளிட்ட அனைத்தும் விஜய் போன்ற மாஸ் ஹீரோவின் படத்திற்கு நிகராக இருக்கும்.” என்றார்.
உண்மை சம்பவம் ஒன்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ‘மோகினி’ படத்தில் டி.என்.ஏ என்ற ஒரு விஷயம் முக்கிய பங்கு வகிக்குமா, அது என்ன என்பது தான் படத்தின் மிகப்பெரிய சஸ்பென்ஸாம்.
சூர்யாவின் ‘சிங்கம் 2’ படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் எஸ்.லக்ஷ்மன் குமார் தயாரித்திருக்கும் இப்படத்தில் திரிஷாவுக்கு ஜோடியாக ஜாக்கி என்ற பாலிவுட் நடிகர் நடித்திருக்கிறார். மற்றும் முக்கேஷ் திவாரி, யோகி பாபு, பூர்ணிமா பாக்யராஜ், லொள்ளு சபா சாமிநாதன், மதுமிதா, ஆர்த்தி கணேஷ், சுரேஷ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தில் கன்னட நடிகை வீனா வெங்கட் என்பவர் மிரட்டலான வேடத்தில் நடித்திருக்கிறார்.
’மோகினி’ படத்தின் டிசைலர் ரசிகர்களை மட்டும் இன்றி திரையுலகினரையும் வெகுவாக கவர்ந்திருக்கிறது. காரணம், டிரைலரை பார்த்தே பலர் படத்தை வாங்க முன் வந்திருவிட்டார்களாம். அதனால் வியாபாரத்திலும் விறுவிறுப்புக்காட்டும் ’மோகினி’ விரைவில் வெளியாக உள்ளது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...