’ஸ்கெட்ச்’ வெற்றியை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் அடுத்ததாக வெளியாக உள்ள படங்கள் ‘சாமி 2’ மற்றும் ‘துருவ நட்சத்திரம்’ ஆகும். இப்படங்களுக்கு பிறகு வெளிநாட்டு நிறுவனம் தயாரிக்கும் கர்ணன் வாழ்க்கை படத்தில் கர்ணனாக நடிக்கும் விக்ரம் பிறகு, கமல்ஹாசன் தயாரிக்கும் படம் ஒன்றிலும் நடிக்கிறார்.
இதற்கிடையே, விக்ரமின் மகன் துருவ், தெலுங்கில் மாபெரும் வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக் மூலம் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார். பாலா இப்படத்தை இயக்கப் போவதாக அறிவித்திருந்தாலும், இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கவில்லை.
இந்த நிலையில், சமீபத்தில் டிவி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்த நடிகர் விக்ரம், அர்ஜுன் ரெட்டி ரீமேக்கில் தனது மகன் நடிக்க மறுத்திருந்தால், அந்த படத்தில் தான் நடித்திருப்பேன், என்று கூறியுள்ளார்.
இளமையான கதாபாத்திரத்தில் 50 வயதுக்கு மேல் ஆகும் விக்ரம் நடிப்பேன், என்று கூறியிருப்பது ஆச்சரியமளித்தாலும், அந்த வேடத்திற்கு ஏற்றவாறு தன்னை மாற்றிக்கொள்ளும் திறமை படைத்தவர் தான் விக்ரம் என்றும் அவரை பாராட்டுகிறார்கள்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...