ரஜினி, கமல் மற்றும் விஷால் பல நடிகர்கள் ஒரே சமயத்தில் அரசியலுக்கு நுழைகிறார்கள். இதில் கமல்ஹாசன் ஏற்கனவே தனது அரசியல் வேலையை தொடங்கிவிட்ட நிலையில், ரஜினிகாந்த் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி என்று அறிவித்திருப்பதோடு, கட்சிக்கு நிர்வாகிகளை நியமிக்கும் பணியையும் தொடங்கிவிட்டார்.
நடிகர் கமல்ஹாசன் வரும் பிப்ரவரி 21 ஆம் தேதி அப்துல் கலாமின் இல்லத்தில் இருந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், அன்றைய தினமே தனது கட்சியின் பெயர் மற்றும் கொடி உள்ளிட்டவற்றை அறிமுகப்படுத்தவும் அவர் முடிவு செய்துள்ளார்.
இந்த நிலையில், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் திண்டுக்கல் ஆகிய நான்கு மாவட்டங்களைச் சேர்ந்த தனது நற்பணி மன்ற நிர்வாகிகளை நேற்று தனது அலுவலகத்தில் சந்தித்து பேசினார். அந்த ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான பிப்ரவரி 24 ஆம் தேதி மதுரையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என்று நடிகர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...