’நெருங்கி வா முத்தமிடாதே’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ருதி ஹரிஹரன். கன்னடத்தில் பிரபல நடிகையாக உள்ள இவர், தமிழில் ‘நிபுணன்’, ‘நிலா’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருக்கிறார்.
தமிழில் தான் குறைவான படங்கள் நடிப்பதற்கு காரணம், தமிழ் சினிமா தயாரிப்பாளர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்தது தான், என்று சமீபத்தில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் ஸ்ருதி ஹரிஹரன் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த தயாரிப்பாளர் ஸ்ருதி ஹரிஹரனை ஒப்பந்தம் செய்யும் போது, ”நாங்கள் ஐந்து பேர் இருக்கிறோம், நாங்கள் உன்னை பயன்படுத்திக் கொள்வோம், அதற்கு சம்மதமா” என்று கேட்டதாகவும், அதற்கு ஸ்ருதி, நான் எப்போதும் கையில் செருப்புடன் தான் இருப்பேன், என்று கூறியதாகவும் கூறினார். இந்த சம்பவத்திற்கு பிறகு அவருக்கு தமிழ்ப் படங்களின் வாய்ப்பு குறைந்துவிட்டதாகவும் கூறினார்.
ஸ்ருதியை படுக்கைக்கு அழைத்த அந்த தயாரிப்பாளர் பிளஸ் அவரது கூட்டாளிகள் நான்கு பேய் யாராக இருப்பார்கள், என்று கோடம்பாக்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதில், அந்த தயாரிப்பாளர் சிக்கிக்கொண்டார்.
ஆம், வெளிநாட்டு உணவு பெயர் ஒன்றை பட தலைப்பாக வைத்து பெரிய வெற்றிக் கொடுத்த அந்த தயாரிப்பாளர் தான், ஸ்ருதியை படுக்கைக்கு அழைத்தவராம். கன்னடத்தில் வெற்றி பெற்ற ஒரு படத்தை தமிழில் ரீமேக் செய்த அந்த தயாரிப்பாளர் அந்த படத்தில் தான் ஸ்ருதியை நடிக்கவ் ஐக்க முயற்சித்தார். ஆனால், திடீரென்று ஹீரோயின் மாற்றிவிட்டார்.
தொடர்ந்து புதுமுக இயக்குநர்களை அறிமுகப்படுத்தி வரும் அந்த தயாரிப்பாளர் தற்போது இயக்குநர் அவதாராமும் எடுத்துள்ளார். அவரது இயக்கத்தில கடந்த ஆண்டு வெளியான படம் வெளியாவதில் பல பிரச்சினைகளை சந்தித்து வெளியானாலும், படம் வெற்றி பெறவில்லை. இதனால் சற்று சோகத்தில் இருக்கும் அந்த தயாரிப்பாளரின் பெயர் டேமஜ் ஆகும் அளவுக்கு நடிகையின் ஸ்ருதியின் ஸ்டேண்ட்மெண்ட் அமைந்துள்ளது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...