தொடர்ந்து ஹிட் பாடல்களை கொடுத்து தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் இசையமைப்பாளர்களின் ஒருவரான டி.இமான், 100 படங்கள் என்ற மலைக்கல்லை தொட்டுவிட்டார். ஜெயம் ரவி நடிப்பில் விரைவில் வெளியாக உள்ள ‘டிக் டிக் டிக்’ தான் இமானின் 100 வது படம்.
தனது இந்த சந்தோஷத்தை பகிந்துக்கொள்வதோடு, தான் கடந்து வந்த பாதையில் தனக்கு உதவியர்கள், வாய்ப்பளித்தவர்கள் என்று அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக பத்திரிகையாளர்களை சந்தித்த டி.இமான், தனது இசைப் பயணம் குறித்தும், வாழ்க்கை பயணம் குறித்தும் பகிர்ந்துக்கொண்டார்.
பள்ளி படிக்கும்போதே கிபோர்டு பிளேயராக பணியாற்றிய துவங்கிய டி.இமான், இரண்டு ஆண்டுகள் சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் பியானா வாசித்தாராம். பிறகு இசையமைப்பாளர் ஆதித்யன், ஹாரிஸ் ஜெயராஜின் தந்தை உள்ளிட்ட சில இசையமைப்பாளர்களிடம் பணியாற்றியவர், சுமார் 250 க்கும் மேற்பட்ட விளம்பரப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். இந்த விளம்பர படங்களுக்கு இசையமைத்ததன் மூலம், குறைந்த நேரத்தில் மக்களை கவரும் வகையில் இசையமைப்பது எப்படி? என்பதை கற்றுக்கொண்டேன், என்றவர் சீரியல்களுக்கு இசையமைத்ததும் தனக்கு சிறந்த அனுபவம், என்று கூறினார்.
தனது முதல் திரைப்படம் வெளியாகவில்லை என்றாலும், தனக்கு இரண்டாம் வாய்ப்பாக ‘தமிழன்’ படத்திற்கு இசையமைக்க வாய்ப்பு கொடுத்த ஜி.வி அவர்களுக்கு நன்றி தெரிவித்தவர், தான் பிறந்து வளர்ந்த சென்னை புரசைவாக்கம் பகுதி மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும், 100 படங்களுக்கு இசையமைத்துவிட்ட நன் இதனை அப்படியே 200, 300 என்று மாற்ற வேண்டும் என்பது என் எண்ணம் அல்ல, நான் திரும்பி பார்க்கும்போது எண்ணிக்கை 100 ஆக இருந்தது. இதை உங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று என் குடும்பத்தார் விரும்பினார்கள். எனது நோக்கமே, காலத்தால் அழியாத 100 பாடல்களை கொடுக்க வேண்டும் என்பது தான். ரசிகர்கள் என்று நான் என்றுமே சொல்ல மாட்டேன், இசை பிரியர்கள் என்று தான் சொல்வேன். அப்படிப்பட்டவர்கள் இமான் என்ற போல்டரில் காலத்தால் அழிக்க முடியாத எனது 100 பாடல்களை வைத்திருந்தால், அது தான் என் இசை வாழ்க்கைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக நான் கருதுகிறேன்.
இதுவரை நான் இசையமைத்த படங்களில் இருந்து அந்த 100 பாடல்கள் இருக்கிறதா இல்லையா, என்பது எனக்கு தெரியாது, ஆனால், அந்த 100 பாடல்களை நோக்கி தான் பயணித்துக் கொண்டிருக்கிறேன், என்றார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...