விஜய் சேதுபதி படத்தை தவிர வேறு எந்த படத்திலும் நடிக்க மாட்டேன், என்று சத்தியம் செய்தது போல தொடர்ந்து அவரது படங்களில் மட்டும் நடித்து வரும் நடிகை காயத்ரி.
‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தின் மூலம் விஜய் சேதுபதியுடன் ஜோடி சேர்ந்தவர், தொடர்ந்து ரம்மி, புரியாத புதிர் ஆகிய படங்களில் நடித்ததோடு, விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் ‘சீதக்காதி’ மற்றும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படங்களிலும் நடித்து வருகிறார். மேலும், விரைவில் வெளியாக உள்ள ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ படத்திலும் காயத்ரி நடிக்கிறார்.
இப்படி ஒன்லி விஜய் சேதுபதி ஹீரோயினான காயத்ரி, விஜய் சேதுபதிக்கு ரொம்பவே ஸ்பெஷலாம். இதை அவரே மேடையில் கூறினார்.
நேற்று சென்னையில் நடைபெற்ற ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ பத்திரிகையாளர் சந்திப்பின் போது பேசிய விஜய் சேதுபதி, “இயக்குநர் ஆறுமுககுமார் தனக்கு என்ன தேவை என்பதில் ரொம்பவே தெளிவாக இருந்தார். அதனால் தான் படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. என்னுடன் நடித்த கெளதம் கார்த்திக் மிகப்பெரிய இடத்திற்கு வருவார். போஸ்டரில் என் புகைப்படம் பெருஷா போடுவாங்க, அப்போது அதை கெளதம் கார்த்திக் எப்படி எடுத்துக்கொள்வார் என்ற கேள்வி என்னுள் இருந்தது, அதனால் முன்பே இது குறித்து அவரிடம் பேச சொன்னேன், ஆனால் அவர் அதை பெரிதுப்படுத்தாமல் நடிக்க சம்மதித்தார். அதுமட்டும் அல்ல, அவருடன் சேர்ந்து நடிக்கும் டேனியலுக்கு கூடுதல் வசனம் மற்றும் காட்சிகள் இருந்தாலோ, அது பற்றி எந்த ஈகோவும் இல்லாம படம் நல்லா வரனும் என்று இருந்தார். இப்படிப்பட மனபான்மை கொண்ட கெளதம் கார்த்திக் நிச்சயம் பெரிய இடத்துக்கு வருவார்.
காயத்ரி, என்னோட ஸ்பெஷல். இந்த சின்ன வயசுலய அந்த பொண்ணுக்கு அதிக அறிவு இருக்கு, எது சொன்னாலும் உடனே அதை புரிந்துக்கொள்வார். அறிவு உள்ள பெண்கள் ஜெயிக்க மாட்டாங்க போல, அதான் காயத்ரியாள பெரிய ஹீரோயினாக முடியல, அவரெல்லாம் மிகப்பெரிய இடத்துக்கு வரவேண்டும்.” என்றார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...