திமுக தலைவர் கருணாநிதியின் பேரனும், செயல் தலைவர் ஸ்டாலினின் மகனுமான உதயநிதி, தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானவர், திடீரென்று ஹீரோவாக களம் இறங்கி தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான சில படங்கள் வெற்றி பெற்றாலும், தற்போது தொடர்ந்து தோல்விப் படங்களைக் கொடுத்து வருகிறார்.
இந்த நிலையில், சினிமாவில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வரும் உதயநிதி, அரசியலில் ஈடுபட முடிவு செய்துவிட்டார். சமீபத்தில் அவர் அளித்த பேட்டி ஒன்றில், தான் அரசியலில் ஈடுபடுவதற்கான நேரம் வந்துவிட்டது, என்று தெரிவித்துள்ளார்.
மேலும், ஆலந்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தேர்தலில் போட்டியிடுவீர்களா என செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின் திமுக சீட் கொடுத்தால் தேர்தலில் போட்டியிடத் தயார் என்றார். மேலும் தான் பிறந்ததில் இருந்தே அரசியலில்தான் இருக்கிறேன் என்றும் தெரிவித்தார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...