இயக்குநர் அமீர் தயாரித்து நடித்துள்ள படம் ‘அச்சமில்லை அச்சமில்லை’. அமீரிடம் உதவியாளராக பணியாற்றியுள்ள முத்துகுமார் என்பவர் இப்படத்தின் மூலம் இயக்குநராவதோடு, முக்கிய வேடம் ஒன்றிலும் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஜெயபிரகாஷ், சாந்தினி, ஹரிஷ் ஜெல்லா, தாருஷி, அருள்தாஸ், மஹேஷ் ஆகியோருடன் 60 புதுமுக நடிகர்களும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.
விவூரி குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னை ஆர்.கே.வி.ஸ்டியோவில் நடைபெற்றது. இதில் சமூக ஆர்வலர்கள் டிராபிக் ராமசாமி, உதயகுமார் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டார்கள்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குநர் அமீர், “’அச்சமில்லை அச்சமில்லை’ படம் ரொம்ப சிறப்பான படம். சமூகத்திற்கு தேவையான ஒரு படம். இதை நான் தயாரித்தேன் என்பதற்காக இல்லை. இந்த படத்திற்கான முதல் விதையை விதைத்தவர், இயக்குநர் முத்துகுமாரின் அப்பா தான். என்னிடம் உதவியாளராக இருந்துவிட்டு படம் எடுக்க முயன்ற முத்துகுமாருக்கு, இரண்டு ஏக்கர் நிலத்தை கொடுத்து இதை விற்று படம் எடுத்துக்கொள் என்று கூறிய அவரது அப்பா தான் இந்த படத்திற்கான முதல் விதை.
இந்த படத்தின் 70 சதவீதம் முடிந்த பிறகே முத்துகுமார் என்னிடம் வந்தார். படத்தை பார்க்கச் சொன்னார். பிறரது படங்களை பார்க்க நான் விரும்புவதில்லை, என்பதால் சிறிது நேரம் பார்க்கலாம் என்ற எண்ணத்தோடு தான் பார்த்தேன், சமூக பிரச்சினையை ரொம்ப நேர்த்தியாக இந்த படத்தில் அவர் சொல்லியிருக்கிறார். 20 நிமிடம் பார்த்த பிறகு முழு படத்தையும் பார்க்க வேண்டும் என்ற ஆவல் ஏற்பட்டதால் படத்தை பார்த்தேன். இதுபோன்ற ஒரு படத்தில் அஜித், விஜய் போன்றவர்கள் நடித்திருந்தால், இந்த படத்தின் லெவலே வேறு. ஆனால், அவர்கள் இதுபோன்ற படங்களில் நடிக்க மாட்டார்கள், காரணம் அவர்கள் 100 கோடி பட்ஜெட்டை தாண்டி விட்டார்கள்.
ஆரம்பத்தில் சிறு சிறு படங்களில் நடிக்கும் நடிகர்கள் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு அப்படிப்பட்ட படங்களில் நடிக்க மாட்ராங்க. நடிக்கவே கூடாது என்றும் முடிவு செய்துவிடுகிறார்கள். காசுக்காக இந்த படத்தை எடுக்கல, மக்களுக்கு சொல்ல வேண்டிய ஒரு முக்கியமான விஷயத்துக்காக தான் இந்த படத்த எடுத்திருக்கிறேன்.
ரஜினிகாந்த் தமிழகத்தின் சிஸ்டம் சரியில்லை, என்று சொன்னார். ஆனால், உண்மையில் இந்தியாவின் சிஸ்டம் தான் சரியில்லை. அதை தான் அவர் சரி செய்ய வேண்டும். அதனால் அவர் டெல்லியில் போட்டியிட்டால் சந்தோஷம் தான்.
தற்போது நடைபெறும் அதிமுக ஆட்சியில் அமைச்சர்களும், எம்.எல்.ஏ-க்களும் பேசுவதை பார்த்தால், அவர்களுக்கு சினிமா நடிகர்கள் எவ்வளவோ மேல் என்று தான் தோன்றுகிறது. இவர்கள் எப்படி பேசுவார்கள் என்பதை தெரிந்து தான் ஜெயலலிதா உயிரொடு இருந்தபோது, இவர்களை எங்கேயும் பேசவிடாமல் இருந்தார் போலிருக்கிறது.
சினிமா சங்கங்கள் எப்போதும் ஆளும் ஒட்டி தான் இயங்கிக் கொண்டிருக்கும். அவற்றுக்கென்று தனி சுய கவுரங்கள் என்று எதுவும் கிடையாது. ஆட்சியாளர்களைப் பார்த்து கேள்வியும் கேட்க மாட்டார்கள். எனக்கு அப்படி ஒரு சம்பவம் திமுக ஆட்சியில் நடந்தது. ஆனால், அப்போது கூட என்னை ”நீ முஸ்லீம் பாகிதாஸ்னுக்கு போ” என்று யாரும் சொன்னதில்லை. எப்போது பா.ஜ.க தமிழக அரசியல் மற்றும் பிரச்சினைகள் குறித்து பேச தொடங்கியதோ, அன்றில் இருந்து என்னை ”முஸ்லிம், பாகிஸ்தானுக்கு செல்ல வேண்டும்” என்று கூறி வருகிறார்கள். ஏதோ, நான் பாகிஸ்தான் போனதும், பார்டரில் இருந்து என்னை வரவேற்பது போல சொல்கிறார்கள். முஸ்லிமாக இருந்தால் பாகிஸ்தானுக்கு போனும், கிறிஸ்தவர்களாக இருந்தால் அமெரிக்காவுக்கு போனும், என்ன நடக்குது இங்கே. என் மண்ணை விட்டுட்டு நான் ஏன் போகனும். தமிழர்கள் மீது போலியான் அக்கறையை காட்டும் நீங்கள் தான் இங்கிருந்து போகனும்.
இந்த படம் வெற்றி பெற்றால், ‘அச்சமில்லை அச்சமில்லை’ இரண்டாம் பாகத்தை எடுப்போம். அதில் தற்போதைய அரசியல் சூழல் அனைத்தையும் பேசுவோம். வழக்கு, கைது என்று எது வந்தாலும் அதை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறோம்.” என்று தெரிவித்தார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...