தயாரிப்பாளர் கணேசன் என்பவர் நடிகர் விமல் மீது சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் பண மோசடி மற்றும் கொலை மிரட்டல் புகார் கொடுத்துள்ளார்.
”நான் கடந்த 3 ஆண்டுகளாக படத்தயாரிப்பில் ஈடுபட்டுள்ளேன். ஜி.கே.ஸ்டூடியோவும் நடத்தி வருகிறேன். ஜி.கே.ஸ்டூடியோ நிறுவனம் சார்பில் 'மன்னர் வகையறா' என்ற பெயரில் புதிய படம் தயாரித்துள்ளோம். அந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் விமல் நடித்துள்ளார். குடியரசு தினத்தன்று படம் வெளியாகும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பில் எனது பெயர் இல்லை. நான் ரூ.1.75 கோடி படத் தயாரிப்புக்கு செலவு செய்துள்ளேன். எனக்கு ரூ.2.15 கோடி, படம் வெளியானவுடன் தர வேண்டும், என்ற ஒப்பந்தம் உள்ளது. ஆனால் என்னை ஓரங்கட்டி விட்டு படத்தை வெளியிட முயற்சி நடக்கிறது. என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார்கள். நடிகர் விமல் உள்ளிட்ட 3 பேர் எனக்கு தர வேண்டிய பணத்தை தராமல் மோசடி செய்யப்பார்க்கிறார்கள். உரிய நடவடிக்கை எடுத்து எனக்கு தர வேண்டிய பணத்தை வசூலித்து தரும்படி வேண்டுகிறேன்” என்று கணேசன் புகாரில் தெரிவித்துள்ளார்.
விமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘மன்னர் வகையறா’ படம் நாளை வெளியாக உள்ள நிலையில், தயாரிப்பாளர் ஒருவர் நடிகர் விமல் மீது அளித்துள்ள இந்த புகாரால் கோடம்பாக்கத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...