டிட்டு புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பாக பானுசித்ரா தயாரிக்கும் படம் ‘ஜெயிக்கபோவது யாரு’. இந்த படத்தில் சக்திஸ்காட் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வந்தனா நடிக்கிறார். மற்றும் ஆர்.பாண்டியராஜன், பவர்ஸ்டார் சீனிவாசன், கோட்டி, சைதன்யா ஆகியோர் நடிக்கிறார்கள்.
இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி ஹீரோவாக நடிக்கும் சக்தி ஸ்காட், ஆண்டன் ஜெப்ரியுடன் இணைந்து இப்படத்திற்கு இசையும் அமைத்துள்ளார்.
படம் குறித்து இயக்குநர் சக்தி ஸ்காட் கூறுகையில், “கார் ரேஸை மையமாக வைத்து உருவாக்கப் பட்ட காமெடி படம். பவர் ஸ்டார், காமெடி வில்லனாக நடித்திருக்கிறார். ஒரு பாடல் காட்சியில் அவர் புருஸ்லீ, அர்னால்டு, ஹிட்லர், ஐயின்ஸ்டீன், தாம்குரூஸ், ஜேம்ஸ்பாண்ட், பில்கேட்ஸ் என பல கெட்டப்களில் காமெடியில் அசத்தியிருகிறார்.
இந்த படம் கின்னஸ் சாதனைக்காக எடுக்கப்பட்ட படம். இயக்கம், ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, பாடல்கள், கலை, விஷுவல் எபெக்ட்ஸ், என சினமாவிற்கான 29 துறைகளையும் ஒரே ஒரு தனி மனிதனாக செய்து கின்னஸ் சாதனைக்காக அனுப்பி இருக்கிறேன்.
இதுவரை ஒரு படம் எடுப்பதற்கான 15 துறைகளையும் ஒரே ஒரு மனிதன் ஜாக்கிசான் அவர்கள் “ ஜோடியாக் “ என்ற ஆங்கிலப் படத்தில் பணிபுரிந்து 2012 ம் ஆண்டில் கின்னஸ் சாதனை படைத்தார்.
அதற்கு பிறகு நான் 29 துறைகளில் பணியாற்றி இந்த படத்தை முடித்துள்ளேன். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். கின்னஸ் புத்தகத்தில் எனது சாதனையும் இடம்பெறும்.” என்றார்.
100 படங்களுக்கு இசையமைத்துள்ள பிரபல இசையமைப்பாளர் டி.இமான், ’ஜெயிக்கப்போவது யாரு’ படத்தின் இசையமை சமீபத்தில் வெளியிட்டார். படம் விரைவில் வெளியாக உள்ளது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...