‘அட்ட கத்தி’, ‘மெட்ராஸ்’, ‘கபாலி’ ஆகிய படங்களை தொடர்ந்து பா.ரஞ்சித் ரஜினியை வைத்து ‘காலா’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில், சமீபத்தில் டப்பிங் பணிகளும் முடிந்துள்ள நிலையில், தனது அடுத்தப்படத்திற்காக தயாராகி வரும் ரஞ்சித், அதில் எம்.எல்.ஏ ஒருவரை நடிக்க வைக்க உள்ளாராம்.
எம்.எல்.ஏ திரைப்படத்தில் நடிப்பது சாதாரண விஷயம் தான் என்றாலும், ரஞ்சித்தின் படத்தில் நடிக்கப் போகும் எம்.எல்.ஏ சாதாரணமான நபர் கிடையாது. ஆம், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் அவரது கண்ணில் விரலை விட்டு ஆட்டிய ஜிக்னேஷ் மேவானி தான் அந்த எம்.எல்.ஏ.
குஜராத் சட்டசபை தேர்தலில் வட்கம் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்டு பாஜக வேட்பாளரை விட அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் ஜிக்னேஷ் மேவானி. அந்த தொகுதியில் பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித் ஷா ஆகியோர் தீவிர பிரச்சாரம் செய்தும் ஒன்றும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடிக்கு சிம்ம சொப்பணமாக விளங்கும் ஜிக்னேஷ் மேவானி, சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்த போது இயக்குநர் பா.ரஞ்சித்தை சந்தித்து பேசினார். ரஞ்சித் - மேனாவனியின் சந்திப்பே தமிழக அரசியலில் சற்று சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் தமிழ்த் திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் தமிழக அரசியல் மட்டும் இன்றி, தமிழ் சினிமாவிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...