ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ மிகப்பெரிய வெற்றி பெற்றது. தற்போது அப்படத்தின் இரண்டாம் பாகத்தை ‘2.0’என்ற தலைப்பில் ஷங்கர் இயக்க, ரஜினிகாந்த் நடித்து வருகிறார். வில்லனாக பிரபல பாலிவுட் ஹீரோ அக்ஷய் குமார் நடிக்க, ஹீரோயினாக எமி ஜாக்சன் நடிக்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை லைகா மூவிஸ் நிறுவனம் ரூ.450 கோடி பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.
கடந்த தீபாவளியன்று படம் வெளியாகும் என்று தயாரிப்பு தரப்பு அறிவித்திருந்தது. ஆனால், கிராபிக்ஸ் பணிகள் முடிவடைய காலதாமதாகும் என்பதால் ரிலீஸ் தேதியை தள்ளி வைப்பதாக அறிவித்தனர். அதனை தொடர்ந்து ஜனவரி 26 ஆம் தேதி படம் ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவித்த தயாரிப்பு தரப்பு, அந்த தேதியிலும் மாற்றம் செய்தது. இறுதியாக ஏப்ரல் 27 ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், ஏப்ரல் 27 ஆம் தேதியும் ‘2.0’ படம் ரிலிஸாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஜனவரி 26 ஆம் தேதியன்று டிரைலரை வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தார்கள். ஆனால், கிராபிக்ஸ் பணிகள் முடிவடையாததால் டிரைலர் வெளியாகவில்லை. இதன் காரணமாக, படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளிப்போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குநர் ஷங்கர், “அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் படத்தின் டிரெய்லர் தயாரிக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது. கிராபிக்ஸ் பணிகளுக்காக அதிக வேலை தேவைப்படுகிறது. டீசர் தயாரானதும் வெளியிடப்படும்” என்று கூறியுள்ளார்.
படத்தில் ஏகப்பட்ட கிராபிக்ஸ் பணிகள் இருப்பதால், அவற்றை முடிக்க ரொம்பவே நாட்கள் பிடிக்கிறதாம். இதில் ரஜினிகாந்த் 20 சதவீதம் தான் நடித்திருப்பதாகவும், மீதமுள்ள 80 சதவீதம் கிராபிக்ஸ் என்பதாலேயே இவ்வளவு நாட்கள் ஆகின்றது என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாக படம் ஏப்ரல் மாதம் வெளியாகாதும் என்றும், மே மாதம் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
தற்போது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள ஸ்டுடியோ ஒன்றில் 2.0 படத்தின் கிராபிக்ஸ் பணிகள் இரவு பகலாக நடைபெற்று வரும் நிலையில், பணிகள் ஏப்ரலுக்குள் முடிந்துவிட்டால், அறிவித்தது போல ஏப்ரல் மாதம் படம் ரிலீஸ் ஆக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...