தான் காதலிக்கும் பெண்ணின் தந்தை ஊர் பஞ்சாயத்து தலைவர் என்பதற்காக, தன் காதலியை பார்க்க தோணும்போதெல்லாம் ஒரு சின்ன விஷயத்தை பெரியதாக்கி, அதையே பஞ்சாயத்தாக கூட்டி, கலாட்டா செய்யும் கதாபாத்திரத்தில் குரு ஜீவா அறிமுகமாகும் படம் ‘குரு உச்சத்துல இருக்காரு’.
இப்படத்தில் கதாநாயகியாக ‘பைசா’ பட நாயகி ஆரா நடித்துள்ளார். மேலும், ஆர்.பாண்டியராஜன், எம்.எஸ்.பாஸ்கர், இமான் அண்ணாச்சி, ஸ்ரீரஞ்சனி, மனோ, நமோ நாராயணன் ஆகியோர்கள் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குநராக அறிமுகமாகிறார் பா.தண்டபாணி. இப்படத்தை பெஸ்ட் மூவிஸ் சார்பில் எம்.தனசண்முகமணி தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு கேரளாவில் அடர்ந்த காட்டுப்பகுதியில் நடைபெற்றது. ஒரு முக்கிய காட்சியை படமாக்கும் போது, மெயின் ரோட்டிலிருந்து 3 கி.மீ அருகில் உள்ள அருவியில் படப்பிடிப்பை நடத்த முடிவு செய்திருக்கிறார்கள். லொக்கேஷன் பார்க்கும் போது அருவியில் வந்த தண்ணீர் படப்பிடிப்பின் போது அருவியில் தண்ணீர் வராததால், 70 லாரிகளில் தண்ணீர் வர வைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.
அந்த அருவியில் நீர் வருவதை கண்டு, அங்குள்ள யானை ஒன்று தாகத்தை தீர்க்க அப்பகுதிக்கு வந்துள்ளது. யானையை பார்த்த ‘குரு உச்சத்துல இருக்காரு’ படக்குழுவினர் மிரண்டிருக்கின்றனர். ஆனால், அந்த யானையோ படக்குழுவினரை தொந்தரவு செய்யாமல் நீரை குடித்து விட்டு சென்றது. அதன் பின் தக்க பாதுகாப்புடன் மீதிப் படப்பிடிப்பு நடத்தப்பட்டது.
தொலைக்காட்சியில் இருந்து கன்னட சினிமாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரங்களில் ஒருவராக மேகா ஷெட்டி மாறியிருப்பது சாதாரண பயணம் கிடையாது...
நடிகர் ஹரிஷ் கல்யாணின் ‘டீசல்’ திரைப்படம், அடுத்தடுத்து மில்லியன் வியூஸ் ஹிட் பாடல்கள் மூலம் ரசிகர்களிடையே கொண்டாட்டத்தை ஏற்படுத்தி உள்ளது...
தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகரான சசிகுமார் கதையின் நாயகனாக நடித்து வரும் 'டூரிஸ்ட் ஃபேமிலி ' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'முகை மழை...