தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வரும் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகும் படம் என்றாலே ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்படுகிறது. அதிலும் விஜய் சேதுபதி, கெளதம் கார்த்தில் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ படம் வித்தியாசமான கான்சப்ட் கொண்ட படம் என்பதால், அப்படம் மீது ரசிகர்கள் மட்டும் இன்றி திரையுலகினரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.
விஜய் சேதுபதி முதல் முறையாக ஒரே படத்தில் பலவிதமான கெட்டப்புகளில் தோன்றும் ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ படம் தமிழகத்தில் மட்டும் 400 க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தரமான படங்களை வெளியிட்டு வரும் கிளாப்போர்ட் தயாரிப்பு நிறுவனம் இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை பெற்றுள்ளது. இது குறித்து இந்நிறுவனத்தின் உரிமையாளர் வி.சத்யமூர்த்தி கூறுகையில், “இது வரை நான் 'ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்' படத்தை பார்க்கவில்லை. ஏனென்றால் எனக்கு விஜய் சேதுபதி சார் மீது முழு நம்பிக்கை இருக்கிறது. அதுமட்டுமின்றி, விஜய்சேதுபதி - கெளதம் கார்த்திக் ஆகியோரின் இந்த புதிய கூட்டணி நிச்சயமாக எல்லா தரப்பு ரசிகர்களாலும் வரவேற்கப்படும் என்று முழுமையாக நம்புகிறேன். 'ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனக்கென்று ஒரு அடையாளத்தை பதிக்க இருக்கிறார் இயக்குநர் ஆறுமுக குமார். இந்த படத்தின் தமிழக விநியோக உரிமையை 'மினிமம் காரண்ட்டி' முறையில் வாங்கி இருப்பது பெருமையாக இருக்கின்றது. வருகின்ற பிப்ரவரி 2 ஆம் தேதி அனைவருக்கும் நல்ல நாளாக இருக்கும்.” என்றார்.
முன்னணி ஓடிடி தளமான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரின் அடுத்த படைப்பான ‘பாராசூட்’ தொடரின் டீசர் வெளியானது...
அபிகா ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிப்பில், ’துள்ளும் காலம்’, ‘சோக்காலி’ ஆகிய படங்களை இயக்கிய ஏ...
மறைந்த எழுத்தாளர் ராஜ் கெளதமன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ள இயக்குநர் பா...