கமர்ஷியல் நாயகியாக வலம் வந்த நயந்தாரா, தற்போது நாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பேன், என்பதில் உறுதியாக இருப்பதோடு, முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தாலும், நோ டூயட், நோ கவர்ச்சி என்ற கண்டிஷனும் போடுகிறாராம். அவர் என்னதான் கண்டிஷன் போட்டாலும், அவரை தங்களது படத்தில் போட வேண்டும் என்று சில தயாரிப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
இந்த நிலையில், நடிகர் கமல்ஹாசனுக்கு நயந்தாரா ஜோடியாகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. ஆம், ஷங்கர் இயக்கத்தில் ‘இந்தியன் 2’ படத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் தான் கமலுக்கு ஜோடியாக நயந்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
தற்போது, நயந்தாராவிடம் பேச்சு வார்த்தை தொடங்கப்பட்டு இருப்பதாகவும், அவருக்கு படத்தில் புரட்சிப் பெண் வேடம் என்றும் கூறப்படுகிறது. நயந்தாரா இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார், கமலுடன் அவர் இணையும் முதல் படம் இதுவாக இருக்கும். அதேபோல், ரஜினி, விஜய், அஜித் ஆகியோருடன் நடித்துள்ள நயந்தாரா, இந்த படத்தில் கமலுடன் நடித்துவிட்டால், தமிழ் சினிமாவின் இரண்டு தலைமுறை முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்ட ஹீரோயின்களின் பட்டியலில் இடம் பிடித்துவிடுவார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...