கடந்த தீபாவளிக்கு வெளியான விஜயின் ‘மெர்சல்’ மிகப்பெரிய வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, அப்படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் ஸ்டுடியோஸ் நிறுவனம், ‘சங்கமித்ரா’ என்ற பிரம்மாண்டத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் ஜெயம் ரவி, ஆர்யா ஆகியோர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து படப்பிடிப்பு தொடங்க இருந்த நேரத்தில், நாயகியாக நடிக்க இருந்த ஸ்ருதி ஹாசன் விலகியதை தொடர்ந்து புதிய ஹீரோயின் தேர்வால் காலதாமதம் ஆனது. இதனால், இப்படத்தின் இயக்குநர் சுந்தர்.சி கிடைத்த கேப்பில் ‘கலகலப்பு 2’ படத்தை இயக்கி முடித்துவிட்டார்.
இந்த நிலையில், ஸ்ரீ தேனாண்டாள் நிறுவனமும் ‘சங்கமித்ரா’ படம் தொடங்குவதற்கு முன்பாக ஒரு படத்தை தயாரிக்க முடிவு செய்துள்ளது. ஆதி ஹீரோவாக நடிக்கும் இப்படத்தை பிரபல டிவி தொகுப்பாளர் விக்னேஷ் கார்த்திக் இயக்குகிறாராம்.
ஆனால், இந்த தகவல் குறித்து தயாரிப்பு தரப்பில் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் வெளியாகவில்லை.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...