ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் அவரது 62 வது படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கியது. சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஒரு படப்பிடிப்பு தளத்தில் பாடல் காட்சி படமாக்கியுள்ளனர்.
இந்த நிலையில், நடிகரும் இயக்குநருமான பார்த்திபன், விஜயை நேரில் சந்தித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கவிதை மூலம் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
விஜயை சந்தித்துவிட்டு வந்த பார்த்திபன்,
அலைகள் கடந்த கடலின் ஆழத்தில்..!
அமைதியாய்...அந்த உயர் நட்சத்திரம்.
சிரிப்பில் கூட இதயம் விஜயம்!
மகனின் பெருமை பூரிப்பாக,
ஆத்ம த்ருப்தி இசையாக-அவர் தாய்!...
என்று பதிவு செய்திருக்கிறார் பார்த்திபன். ஆனால், அவர் ஏன் விஜயை சந்தித்தேன், என்பதை குறித்து எதுவும் பதிவிடவில்லை.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...