கடந்த சில நாட்களாக வெளியே தலை காட்ட முடியாத அளவுக்கு ஆண்டாள் சர்ச்சையில் சிக்கி தவித்த வைரமுத்து, ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்காக ரூ.5 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்.
இதற்கான நிகழ்வு இன்று சென்னை லீ மெரிடியன் ஓட்டலில் நடைபெற்றது. இதில் ஹாருவர்டு தமிழ் இருக்கை ஆட்சிக்குழு இயக்குநர்களீல் ஒருவரான ஆறுமுகம் முருகையா ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வைரமுத்துவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்.
எழுத்தாளர் சா.கந்தசாமி வாழ்த்துரை வழங்கினார். தொழிலதிபர் பழனி ஜி.பெரியசாமி தலைமையுரை ஆற்றினார். மற்றும் இவ்விழாவில் கவிஞர்கள் வா.மு.சேதுராமன், முத்துலிங்கம், அறிவுமதி, மனுஷ்ய புத்திரன், சல்மா, இளையராபரதி, மதன் கார்க்கி, கபிலன் வைரமுத்து, எழுத்தாளர்கள் மாலன். சுப.வீரபாண்டியன், காவ்யா சண்முகசுந்தரம், இமையம், நடிகர்கள் பாண்டியராஜன், ஜோ மல்லூரி, தொழிலதிபர்கள் சிங்கப்பூர் முஸ்தபா, வசந்தபவன் ரவி, பாலு அய்யப்பன், தமிழ்ச்செல்வன், தமிழரசு, சிங்காரம் மற்றும் தமிழ் அறிஞர்களும் எழுத்தாளர்களும் கலந்துக்கொண்டனர்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...