பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான ‘நிமிர்’ ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தில் உதயநிதி போட்டோகிராபர் வேடத்தில் நடித்திருப்பதால், சென்னையை சார்ந்த பிரபல புகைப்படக்கலைஞர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்களுக்கு ஒரு பிரத்தியேக காட்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. படத்தை பார்த்த இவர்கள், படத்தையும் உதயநிதியின் கதாபாத்திரத்தையும் அவரது நடிப்பையும் மிகவும் ரசித்து மனதார வாழ்த்தி பாராட்டியுள்ளனர்.
இதில் ஒளிப்பதிவாளர்கள் ஆர்.டி.ராஜசேகர், ராபர்ட், ஜி.பி.கிருஷ்ணா, பாலமுருகன், கார்த்திக் ராஜா. சி.ஜே.ரஜ்குமார், ஆர்ம்ஸ்ட்ராங், எஸ்.ஆர்.சதீஷ்குமார், கிச்சாஸ், பி.சி.ஸ்ரீராம் ஆகியோர் கலந்துக்கொண்டார்கள். இவர்களுக்கு பிரத்யேக நினைவு பரிசும் வழங்கப்பட்டன.
இது குறித்து இயக்குநர் பிரியதர்ஷன் பேசுகையில், “ஒளிப்பதிவில் ஜாம்பவானாக இருந்த வின்சென்ட் மாஸ்டர் அவர்கள் தான் எனது வாழ்வில் மிகப்பெரிய உந்துதலாக இருந்துள்ளார். அவரால்தான் எனக்கு புகைப்பட கலைஞர்கள் மீதும் ஒளிப்பதிவாளர்கள் மீதும் எனது மரியாதை மேலும் கூடியது. 'நிமிர்' படத்தை அவருக்கு சமர்ப்பிக்கிறேன். இந்த தருணத்தில், மண் வாசனையின் முக்கியத்துவத்தை எனக்கு உணர்த்திய இயக்குனர் பாரதிராஜாவிற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்'' என்றார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...