கேரள மாநிலம், திருவனந்தபுரத்தில் சமீபத்தில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்று பேசிய நடிகை பார்வதி, சினிமாவில் பெண்களை இழிவுப்படுத்தி வசனங்கள் இடம்பெறுவதற்கு கண்டனம் தெரிவித்ததோடு, மம்மூட்டி நடிப்பில் வெளியான ‘கசாபா’ படத்தில் பெண்களுக்கு எதிராக இடம்பெற்றிருக்கும் வசனங்களையும் சுட்டிக்காட்டினார்.
பார்வதியின் இத்தகைய பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்த நடிகர் மம்மூட்டி ரசிகர்கள், சமூக வலைதளங்களில் அவரை கடுமையாக திட்டியதோடு, மன்னிப்பு கேட்கும்படியும் வற்புறுத்தினர். மேலும், தொலைபேசி மூலமாக பார்வதிக்கு சிலர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார். இதையடுத்து, போலீசில் பார்வதி புகார் அளித்தார். அதன் பிறகு ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், பார்வதிக்கு மீண்டும் சிலர் கொலை மிரட்டல் விடுப்பதோடு, மம்மூட்டியிடம் மன்னிப்பு கேட்கும்படியும் வற்புறுத்தி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறிய பார்வதி, “கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் இருக்கிறது. அதில் யாரும் குறுக்கிட முடியாது. இந்திய பிரஜை என்ற முறையில் எனது எண்ணங்களை வெளிப்படுத்த எனக்கு உரிமை இருக்கிறது. சினிமாவில் பெண்கள் நிலைமை பற்றி பேசும்போது ‘கசாபா’ படத்தில் இடம்பெற்றுள்ள எதிர்மறை வசனங்களை சுட்டிக்காட்டினேன். அதற்காக எனக்கு தொடர்ந்து கொலை மிரட்டல்கள் வருகிறது. பாலியல் ரீதியாகவும் விமர்சிக்கிறார்கள். மன்னிப்பு கேட்கும்படியும் வற்புறுத்துகின்றனர். நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...