ஆண்டாள் சர்ச்சையில் சிக்கிய பாடலாசிரியர் வைரமுத்து கடந்த பல நாட்களாக பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறார். யார் யாரோ, என்ன என்னவோ பேசி வைரமுத்துவுக்கு தெரிவித்த கண்டனத்தால், அவர் மட்டும் அல்ல அவரது குடும்பமும் வீட்டுக்குள் கதறி அழுதிருப்பார்கள். அந்த அளவுக்கு அவர்களை ஒரு கும்பல் வசைப்பாடியது.
இந்த நிலையில், பொது நிகழ்ச்சிகளில் தலைகாட்டுவதை தவிர்த்து வந்த வைரமுத்து, ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்காக ரூ.5 லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்ததோடு, சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் அதற்கான விழா ஒன்றையும் ஏற்பாடு செய்திருந்தார்.
நேற்று நடைபெற்ற இவ்விழாவில், தொழிலதிபர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்துக்கொள்ள, அவர்களது முன்னிலையில் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை வைரமுத்து வழங்க, அதே மேடையில் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்துக்கொண்டவர்களில் ஒருவரான ‘சேலம் ஆர்.ஆர் பிரியாணி’ உணவகத்தின் உரிமையாளர், தனது சார்பாக ஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்காக ரூ.10 லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்தார்.
அறிவித்தது மட்டும் இன்றி, மேடையிலேயே ரூ.10 லட்சத்திற்கான காசோலையை எழுதி, சம்மந்தப்பட்டவர்களிடம் அவர் கொடுத்தது, பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.
பல ஆண்டுகளாக தமிழால் பல கோடி சம்பாதித்த, சம்பாதித்து வரும் வைரமுத்து ரூ.5 லட்சம் கொடுக்க, சமீபத்தில் தனது தொழில் மூலம் வளர்ந்த ஒருவர் ரூ.10 லட்சம் கொடுத்தது, வைரமுத்துவை தலைகுனிய செய்துவிட்டது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...