தொழிலதிபர் ஒருவர் தனக்கு பாலியல் தொல்லை அளித்து வருவதாக நடிகை அமலா பால், நேற்று போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து, அழகேசன் என்பவரை போலீஸ் நேற்று கைது செய்த நிலையில், போலீசாரிடம் அழகேசன் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
சென்னை கொட்டிவாக்கத்தில் வசிக்கும் அழகேசன்(40) என்ற தொழில் அதிபர் தன்னிடம் வந்து பாலியல் தொழிலுக்கு (sexual trade) அழைப்பது போன்று பேசியதாக நடிகை அமலா பால் போலீசில் புகார் அளித்துள்ளார். அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அழகேசனை கைது செய்துள்ளனர்.
மலேசியாவில் இருக்கும் தொழில் அதிபர் ஒருவர் அமலா பாலுக்கு பார்ட்டி கொடுக்கிறார். அந்த பார்ட்டிக்கு வர அமலா பால் சம்மதித்துள்ளார் என்று என் நண்பர் பாஸ்கர் என்னிடம் தெரிவித்தார் என அழகேசன் போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
அமலா பால் பார்ட்டியில் கலந்து கொள்வதை மீண்டும் உறுதி செய்தி வருமாறு கூறி பாஸ்கர் அமலாவின் மலேசியா தொடர்பு எண்ணை அளித்தார். அந்த எண்ணுக்கு போன் செய்தபோது அமலாவின் மேனேஜர் எடுத்து அவரை நடனப் பயிற்சி பள்ளியில் சென்று பார்க்குமாறு கூறினார் என்று அழகேசன் விசாரணையின்போது கூறியுள்ளார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...