விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ நாளை (பிபரவரி 2) உலகம் முழுவதும் பிரம்மாண்டமாக வெளியாகிறது.
சிறப்பான ஓபனிங் உள்ள ஒரு சில நடிகர்களில் விஜய் சேதுபதியும் ஒருவர் என்பதாலும், தொடர்ந்து அவரது படம் வெற்றி பெற்று வருவதாலும், ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேபோல், அப்படத்திற்கான விளம்பரமும் மிகப்பெரிய அளவில் செய்யப்பட்டுள்ளது.
அஜித், விஜய் படங்கள் வெளியானால் எத்தகைய கொண்டாட்டம் இருக்குமோ, அதைவிடவும் மிகப்பெரிய கொண்டாட்டங்களுக்கு சென்னையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை நிரூபிக்கும் வகையில், சென்னையில் உள்ள பல முக்கிய தியேட்டர்கள் இப்போதே விஜய் சேதுபதி விழா பூண்டுள்ளது.
கட்டடங்களை மறைக்கும் பேனர்கள், திரையரங்கங்களை மறைக்கும் கட்-அவுட், வாயில் முகப்பு, தோரணம், கொடி என்று விஜய் சேதுபதியின் வேறு எந்த படமும் காட்டாத மாஸை ‘ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன்’ படம் காட்டியுள்ளது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...