கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் நாயகியாக வலம் வரும் திரிஷா, நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். அதன்படி ‘மோகினி’, ‘கர்ஜனை’ என்று அதிரடியான ஆக்ஷன் கதைக்களத்தில் நடித்து வரும் திரிஷா, முற்றிலும் மாறுபட்ட வேடத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
‘குற்றப்பயிற்சி’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்டை ஸ்ரீ குருஜோதி பிலிம்ஸ் சார்பாக ஜி.விவேகானந்தன் தயாரிக்க, பாலாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய வர்ணிக் என்பவர் இயக்குகிறார்.
1980 காலகட்டத்தின் பின்னணியில் நடக்கும்படி அமைக்கப்பட்டிருக்கும் இத்திரைப்படத்தின், பெண் துப்பறிவாளராக திரிஷா நடிக்கிறார். மற்றும் சுரபி, சூப்பர் சுப்பராயன் உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடிக்கிறார்கள்.
உண்மைச்சம்பவம் ஒன்றை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்தின் கதை, ஒரு கொலையும், கொலையின் பின்னணியும் துப்புதுலக்கும் விதமாக விருவிருப்பான திரைக்கதை அமைத்து உருவாகியுள்ளது. தமிழ் சினிமா வரலாற்றில் படத்தின் முதன்மை கதாபாத்திரம் பெண் துப்பறிவாளராக இருப்பது இதுவே முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் இந்திய பெண் துப்பறிவாளரான ரஜினி பண்டித் அவர்களை உத்வேகமாக கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டிருக்கிறதாம்.
பாபு குமார் ஐ.இ ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ரதன் இசையமைக்க மதன் படத்தொகுப்பு செய்கிறார். பாலசந்தர்.சி.எஸ் கலையை நிர்மாணிக்க, சுப்ரீம் சுந்தர் ஆக்ஷன் காட்சிகளை வடிவமைக்கிறார். பாபா பாஸ்கர், கிஷோர் ஆகியோர் நடனம் அமைக்க, சஷி.டி.வி தயாரிப்பு மேற்பார்வையை கவனிக்க, நிகில் மக்கள் தொடர்பு பணியை கவனிக்கிறார்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...