தொடர்ந்து வெற்றிப் படங்களை கொடுத்து வந்த விஜய் ஆண்டனி, ‘அண்ணாதுரை’ படத்தில் மிகப்பெரிய அடி வாங்கியவர், அதை கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகி வரும் ‘காளி’ ஈடுகட்டி வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது.
இதில், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக அஞ்சலி நடித்திருக்கிறார். மற்றும் சுனைனா, ஷில்பா மஞ்சுநாத், அம்ரிதா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். விஜய் ஆண்டனி தயாரித்துள்ள இப்படத்தின் பின்னணி வேலைகள் தொடங்கியுள்ள நிலையில், அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி காக்கி சட்டை அணிந்துள்ளார்.
ஆம், விஜய் ஆண்டனி போலீஸ் வேடத்தில் நடிக்கிறார். ‘திமிரு புடிச்சவன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தின் பஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
கணேஷா இயக்க உள்ள இப்படத்தை விஜய் ஆண்டனியின் விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் நிறுவனம் சார்பில் பாத்திமா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி 7 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...