1991 ஆம் ஆண்டு கே.ஆர் இயக்கத்தில் வெளியான ‘ஈரமான ரோஜாவே’ படத்தின் மூலம் அறிமுகமானவர் சிவா. முதல் படம் கொடுத்த வெற்றியால் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த இவர். பிறகு பட வாய்ப்புகள் இன்றி தொலைக்காட்சி தொடங்களில் நடித்து வந்தார். பிறகு அந்த வாய்ப்பும் பறிபோன நிலையில், ஆளே காணாமல் போய்விட்டார்.
இந்த நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வெள்ளித்திரைக்கு வந்துள்ள சிவா ‘துலாம்’ என்ற படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வி மூவிஸ் சார்பில் விஜய் விக்காஷ் தயாரிக்கும் இப்படத்தை ராஜ நாகஜோதி இயக்குகிறார்.
போதைக்கு அடிமையான கல்லூரி மாணவர்களின் வாழ்வியலையும், மனசாட்சி உள்ள மனிதர்கள் இன்னும் நிறையபேர் உள்ளார்கள் என்பதையும் விவரிக்கும் படமாக உருவாகும் இப்படத்தில் நாயகனாக புதுமுகம் நிவாத் நடிக்க, நாயகியாக டெப்லினா மற்றும் ஜாக்சி ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் பொன்னம்பலம், மனோபாலா, பாலாசிங், மோனா பிந்த்ரே ஆகியோரும் நடிக்கிறார்கள். வில்லன் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் விஜய் விக்காஷ் நடித்திருக்கிறார்.
கானா பாலா ஒரு பாடலை எழுதி பாடியிருப்பதோடு, அதில் நடித்தும் இருக்கிறார். மேலும், நா.முத்துக்குமார் கடைசியாக பாடல் எழுதியது இந்த படத்திற்காக தான் என்பது குறிப்பிடத்தக்கது. அலெக்ஸ் பிரேம் நாத் இசையமைக்கும் இப்படத்திற்கு கொளஞ்சி குமார் ஒளிப்பதிவு செய்ய, சுரேஷ் அர்ஸ் படத்தொகுப்பு செய்கிறார்.
சென்னை, பாண்டிச்சேரி மற்றும் ஊட்டியில் படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...