ஆர்.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 62 வது படத்தில் நடித்து வரும் விஜய், விரைவில் தனது மகளை சினிமாவில் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
’தெறி’ படத்தில் விஜயின் சிறு வயது மகளாக நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருந்தார். அதே படத்தில், கிளைமாக்ஸின் போது விஜயின் மகளாக சற்று வளர்ந்த கதாபாத்திரத்தில், விஜயின் மகள் திவ்யா சாஷாவே நடித்திருப்பார். அந்த ஒரு காட்சியில் திரையில் தோன்றிய அவர் விரைவில் தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், நடிகையாக அல்ல பாடகியாக.
ஆம், விஜயின் மகள் திவயா சாஷா, தனது தந்தையை போலவும், பாட்டி ஷோபா சந்திரசேகர் போல நன்றாக பாடும் திறமை கொண்டவராம். தற்போது பல பாடல்களை பாடி அனைவரிடமும் பாராட்டு பெற்று வரும் அவர் விரைவில் திரைப்படங்களில் பாட இருக்கிறாராம்.
விஜயின் மகன் சஞ்சய், ‘வேட்டைக்காரன்’ படத்தில் அப்பாவுடன் பாடல் ஒன்றுக்கு நடனம் ஆடினார். அதை தொடர்ந்து அவர் நடிப்பில் ஆர்வமாகியிருப்பதோடு, அதற்காக தன்னை தாயரிப்படுத்தி வருகிறாராம்.
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...