இறைவன் சினி கிரியேஷன்ஸ் என்கிற பட நிறுவனம் சார்பாக C.செல்வகுமார் தயாரிக்கும் படம் ‘ஒரு கனவு போல’ இந்த படத்தில் ராமகிருஷ்ணன், சௌந்தர்ராஜா இருவரும் நாயகர்களாக நடிக்கிறார்கள். நாயகியாக புதுமுகம் அமலா நடிக்கிறார். மற்றும் அருள்தாஸ், சார்லி, மயில்சாமி, வெற்றிவேல் ராஜா, கவி பெரியதம்பி, வின்னர் ராமசந்திரன், ஸ்ரீலதா, பாலாம்பிகா ஆகியோர் நடிக்கிறார்கள். கேரளாவில் தேசிய விருது பெற்ற இயக்குனர் மதுபால் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.
ஒளிப்பதிவு - அழகப்பன்.என், இவர் மலையாளத்தில் 60 படங்களுக்கு மேல் ஒளிப்பதிவு செய்தவர். அதில் 40 படங்களின் மூலம் ஏராளமான விருதுகளை பெற்றிருக்கிறார். புலவர் புலமைப்பித்தன், முத்துலிங்கம், சினேகன் பாடல்களுக்கு இ.எஸ்.ராம் இசையமைக்கிறார். கலை - எம்.டி.பிரபாகரன், எடிட்டிங் - சாபு ஜோசப், ஸ்டன்ட் - பி.தியாகராஜன், நடனம் - எஸ்.எல்.பாலாஜி, தயாரிப்பு மேற்பார்வை - எம்.செந்தில்
தயாரிப்பு - சி.செல்வகுமார், கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் வி.சி.விஜய்சங்கர்
படம் குறித்து இயக்குநர் கூறுகையில், “இப்பொழுது வலுவான திரைக்கதையும் , நல்ல திரைக் கலை வடிவமும் கொண்டு வெளிவரும் படங்களுக்கு மக்களிடையே பெருத்த வரவேற்பு கிடைக்கிறது. அந்த வகையில் வந்த, விக்ரம் வேதா, பாகுபலி 2, மீசைய முறுக்கு போன்ற படங்கள் பெரு வெற்றிப் படங்களாக அமைந்தன. அந்த வரிசையில் ஒரு கனவு போல படமும் சிறந்த திரை வடிவமாக அமைக்கப் பட்டிருக்கிறது. நிச்சயம் இந்த படமும் மக்களிடையே பெருத்த வரவேற்பை பெறும் ! என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது.
இன்றைய இளைஞர் சமூகத்தின் இன்றியமையாத - முக்கியமான நட்பைப் பற்றி இந்தப் படம் பிரதிபலிக்கும். ஒரு லாரி டிரைவருக்கும் ஒரு இசைக் கலைஞனுக்கும் இடையே ஏற்பட்ட நட்பின் பரிமாணங்களை உணர்ச்சி பூர்வமாக இப்படத்தில் வெளிப்படுத்தியிருக்கிறோம். இத்திரைப் படம் வருகிற செப்டம்பரில் வெளியாக இருக்கிறது.” என்றார்.
சிட்டி லைட் பிக்சர்ஸ் சார்பில் விக்னேஷ் சுப்ரமணியன் தயாரிப்பில், இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில், இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, காதல் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம் ’2K லவ் ஸ்டோரி’...
இயக்குநர் எஸ் . யூ. அருண்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ' வீர தீர சூரன் - பார்ட் 2 ' திரைப்படத்தில் விக்ரம், எஸ் ...
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியிருக்கும் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் சீரிஸான, ஆஃபீஸ் சீரிஸின் டைட்டில் டிராக் ‘ஆஃபீஸ் பாட்டு’ பாடலை இப்போது வெளியிட்டுள்ளது...