’சபாஷ்’, ‘கண்ணன் வருவான்’, ‘பாளையத்து அம்மன்’, ‘வேதம்’ உள்ளிட்ட பல தமிழ்ப் படங்களில் நடித்தவர் திவ்யா உன்னி. ஒரு சில தெலுங்கு மற்றும் கன்னடப் படங்களில் நடித்திருக்கும் இவர், ஏராளமான மலையாளப் படங்களில் நடித்திருக்கீறார்.
கடந்த 2002 ஆம் ஆண்டு சுதீர் என்பவரை திருமணம் செய்துக் கொண்ட திவ்யா உன்னிக்கு, அர்ஜுன், மீனாட்சி என இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள். இதற்கிடையே, கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து வாழ்ந்து வந்த இவர், 2016 ஆம் ஆண்டு தனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றுவிட்டார்.
இந்த நிலையில், திவ்யா உன்னி இரண்டாம் திருமணம் செய்துக் கொண்டுள்ளார். அருண் குமார் என்ற வாலிபரை திவ்யா உண்ணி திருமணம் செய்துக்கொண்டார். நேற்று நடைபெற்ற இந்த திருமணத்தில், திவ்யா உன்னி மற்றும் அருண் குமாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துக் கொண்டார்கள்.
Actress #DivyaUnni and @ArunKumar gets married #DivyaUnniSecondMarriage pic.twitter.com/AmwXtzXMJw
— CinemaInbox (@CinemaInbox) February 5, 2018
இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன், நடனப் புயல் என்று வர்ணிக்கப்படும் நடிகரும், நடன இயக்குநருமான பிரபுதேவாவின் பிரமாண்டமான நேரடி நடன நிகழ்ச்சி இந்தியாவில் முதல் முறையாக நடக்க உள்ளது...
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...