ரஜினிகாந்த் நடிப்பில் ‘2.0’ மற்றும் ‘காலா’ என இரண்டு படங்கள் உருவாகி வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் ‘2.0’ படத்தை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் மிகப்பெரிய பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது. ‘எந்திரன்’ படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தில் வில்லனாக இந்தி நடிகர் அக்ஷய் குமார் நடிக்க, ஹீரோயினாக எமி ஜாக்சன் நடித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.
‘கபாலி’ யை தொடர்ந்து மீண்டும் ரஞ்சித்துடன் ‘காலா’ படத்தில் ரஜினி இணைந்திருப்பதால் அப்படம் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, முதலில் ‘2.0’ படத்தை ரிலீஸ் செய்வதாக ரஜினிகாந்த் முடிவு செய்திருந்த நிலையில், அப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிய இன்னும் காலம் ஆகும் என்பதால், அதற்கு முன்பாக ‘காலா’ படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்திருக்கிறாராம்.
தனுஷின் வுண்டர் பார் நிறுவனம் தயாரித்துள்ள ‘காலா’ மும்பையில் வசிக்கும் தமிழ் தாதா பற்றிய கதையாகும். இதில் ரஜினிகாந்த் வயதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து டப்பிங் பணிகள் சென்னையில் நடைபெற்று வந்தது. அனைத்து நடிகர்களும் டப்பிங்கை முடித்த நிலையில், கடைசியாக ரஜினிகாந்த் டப்பிங் பேசி முடித்துவிட்டார்.
தற்போது இறுதி கட்ட பணிகளில் படக்குழுவினர் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், இப்படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 13ம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...