அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் டி.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் ‘பக்கா’.
விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் டி.சிவகுமார் நடிக்கிறார்.
எஸ்.சரவணன் ஒளிப்பதிவு செய்ய, சி.சத்யா இசையமைத்திருக்கிறார். யுகபாரதி, கபிலன் ஆகியோர் பாடல்கள் எழுத, கதிர் கலைத் துறையை கவனித்துள்ளார். கல்யாண் மற்றும் தினேஷ் நடனம் அமைத்துள்ளனர். மிராக்கிள் மைக்கேல் ஸ்டண்ட் காட்சிகளை வடிவமைக்க, சசிகுமார் எடிட்டிங் செய்துள்ளார். தயாரிப்பு நிர்வாகத்தை செந்தில்குமார் கவனிக்க, பி.சரவணன் இணை தயாரிப்பை கவனித்துள்ளார்.
கதை, திரைக்கதை, வசனம் எழுதி எஸ்.எஸ்.சூர்யா இயக்கியிருக்கும் இப்படத்தின் பாடல்கள் மிகப்பெரிய ஹிட் ஆகியுள்ள நிலையில், சமீபத்தில் தணிக்கை குழுவினருக்கு படம் திரையிடப்பட்டது. படத்தை பார்த்து வெகுவாக பாராட்டிய அதிகாரிகள், யு சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள்.
குடும்பமாக பார்க்க கூடிய கமர்ஷியல் காமெடிப் படமாக உருவாகியுள்ள ‘பக்கா’ விரைவில் வெளியாக உள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...