இசையால் தமிழர்களை கட்டிப்போட்ட இளையராஜாவுக்கு மத்திய அரசு சார்பில் வழங்கப்படும் பத்மவிபூஷன் விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள் என பல்வேரு துறையைச் சேர்ந்தவர்கள் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்து, அவரிடம் ஆசியும் பெற்றுவருகிறார்கள்.
இந்நிலையில், சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டூடியோஸில் இளையராஜாவை சந்தித்த அமைச்சர் மாஃபா பாண்டியன் பத்மவிபூஷன் விருது பெற்றதற்காக அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தார். பின்னர், அவர் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார்.
இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை கலையின் மூலம் ஒன்றிணைக்கும் விதமாக, தமிழ் பண்பாட்டு மையத்தின் சார்பாக கர்நாடக சங்கீதத்தையும், பரதநாட்டியத்தையும் வளர்க்க திட்டமிட்டுள்ளதாகவும், அதற்காக இளையராஜாவிடம் ஆலோசனை பெற வந்ததாகவும் கூறினார்.
முன்னதாக, அதிமுக கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகைச் செல்வனும் இளையராஜாவை சந்தித்து அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தார்.
மேலும், பத்திரிகையாளர்களும் இன்று பிரசாத் ஸ்டுடியோவில் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...