Latest News :

விஷாலுக்கு எதிராக தேர்தலில் போட்டியிடும் ஜே.கே.ரித்தீஷ்!
Thursday February-08 2018

’கானால் நீர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமான ஜே.கே.ரித்தீஷ், அதன் ஒரு பிறகு ஒன்று இரண்டு படங்களில் நடித்தாலும், திரையுலகமே தன்னை திரும்பி பார்க்க செய்தார். அதுமட்டும் இன்றி அரசியலில் ஈடுபட்ட அவர், திமுக சார்பில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார்.

 

பிறகு திமுக-வில் இருந்து விலகிய அவர் அதிமுக-வில் இணைந்ததோடு, நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்ட விஷால் தலைமையிலான அணியில் இணந்து தீவிரமாக பணியாற்றினார். சங்க நிர்வாகிகள் குழுவில் இருந்த ரித்தீஷ், அதிமுக தலைமையின் உத்தரவுப்படி, தேர்தலில் போட்டியிடாமல், விஷால் தலைமையிலான அணி வெற்றி பெறுவதற்கான வேலைகளை செய்து வந்தவர், தனது பண பலத்தால், நடிகர் சங்க உறுப்பினர்களை கவர்ந்தார். இதையடுத்து, நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்றாலும், அந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமானவராக ரித்தீஷ் இருந்தார்.

 

இதற்கிடையே, விஷால் அணி நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, ஜே.கே.ரித்தீஷுக்கும் விஷாலுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, தற்போது தீவிரமடைந்துள்ளது. விஷாலை கடுமையாக எதிர்ப்பவர்களுடன் இணைந்துள்ள ஜே.கே.ரித்தீஷ், விஷால் மற்றும் அவரது அணியை நடிகர் சங்கத்தை விட்டு விரட்டியடிப்பதற்கான பணியில் ஈடுபட்டுள்ளார்.

 

விஷால் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகிகளின் பதவிக்காலம் இந்த ஆண்டோடு முடிவடைகிறது. வரும் மே மாதம் நடிகர் சங்கத்திற்கு தேர்தல் வர உள்ளது. இந்த தேர்தலில், விஷாலை எதிர்த்து ஜே.கே.ரித்தீஷ் தேர்தலில் போட்டியிட முடிவு செய்திருக்கிறார்.

 

இது குறித்து நேற்று சென்னையில் நடைபெற்ற திரைப்பட இசை வெளியீட்டு விழா ஒன்றில் பேசிய ரித்தீஷ், வர இருக்கும் நடிகர் சங்க தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக அறிவித்ததோடு, சங்கத்தை விட்டு விஷாலை விரட்டியடிக்கப் போவதாகவும், கூறினார்.

Related News

1961

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

Recent Gallery