Latest News :

மாதவன் மீது நடந்த இனவெறி தாக்குதல்!
Thursday February-08 2018

மணிரத்னத்தின் ‘அலைபாயுதே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான மாதவன், அதற்கு முன்பாக இந்தி சீரியல்களில் நடித்து வந்ததோடு, மாடலிங் துறையிலும் இருந்து வந்தார். ‘அலைபாயுதே’ படத்திற்கு பிறகு பல தமிழ்ப் படங்களில் நடித்தவர், பாலிவுட்டிலும் முக்கிய ஹீரோவாக வலம் வந்தார்.

 

மாதவன் நடிப்பில் இந்தி மற்றும் தமிழில் பல படங்கள் ஹிட்டானது. அவரது நடிப்பில் தமிழில் கடந்த ஆண்டு வெளியான ‘இறுதிச்சுற்று’ மற்றும் ‘விக்ரம் வேதா’ ஆகிய இரண்டு படங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

 

இந்த நிலையில், மாதவன் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகியிருக்கும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. மாதவன் சென்னையை சேர்ந்தவர் என்றாலும், அவர் சிறு வயது முதல் பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் வசித்து வந்தார். அந்த வகையில், மாதவன் பீகாரில் வசிக்கும் போது அவரை அங்கு மதராஸி என்று தான் அழைத்தார்களாம். மேலும், அவரையும் அவரது குடும்பத்தாரையும் தமிழ் குடும்பம் என்பதால், அக்கம் பக்கத்தினர் ஒதுக்கியே வைத்தார்களாம்.

 

தனது 20 வயது வரை தன்னை கொஞ்சம் ஒதுக்கிய தான் வைத்ததாக கூறியுள்ள மாதவன், எதற்காக தன்னை வேறுபடுத்தி பார்த்தார்கள் என்று, இன்று வரை தெரியவில்லை, என்றும் கூறியுள்ளார்.

 

தற்போது உயர்ந்த நிலையில் இருக்கும் நடிகர் மாதவனும், தமிழர் என்பதால் தனது இளம் வயதில் இனவெறி தாக்குதலுக்கு ஆளாகியிருப்பது தமிழர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Related News

1964

”பெண்கள் இல்லாமல், நம் உலகம் இல்லை” - நடிகர் ஜெயம் ரவி உருக்கம்
Saturday January-11 2025

கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...

எல்லைகளைத் தாண்டிய சினிமா அனுபவம்! - கவனம் ஈர்க்கும் 'டாக்ஸிக்' கிளிம்ப்ஸ்
Friday January-10 2025

கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...

Recent Gallery