விஷாலை வைத்து தான் இயக்கிய ‘துப்பறிவாளன்’ வெற்றி பெற்றதோடு, ‘துப்பறிவாளன்’ இரண்டாம் பாகம் எடுக்கவும், அதில் நடிக்கவும் தான் தயாராக இருப்பதாக விஷால் கூறியதாலும் குஷியில் இருந்த மிஷ்கின், தற்போது ரொம்பவே அப்செட்டில் இருக்கிறாராம். அதற்கு காரணம், அவர் தயாரித்த ‘சவரக்கத்தி’ தான் என்ற தகவல் கசிந்துள்ளது.
மிஷ்கின் கதை, திரைக்கதையில் உருவாகியுள்ள ‘சவரக்கத்தி’ படத்தை அவரது தம்பி ஆதித்யா இயக்கியுள்ளார். தனது தம்பியை இயக்குநராக்குவதற்காக கதை, திரைக்கதை எழுதிய மிஷ்கின், அப்படியே தயாரிப்பாளராகவும் மாறினார். கடந்த 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த படம் போதிய பணம் இல்லாமல் இடையில் நின்றுவிட்டது. அதன் பிறகு விஷாலை வைத்து மிஷ்கின் துப்பறிவாளன் படத்தை இயக்க, அப்படத்தினால் அவருக்கு கிடைத்த சம்பளத்தை வைத்து ‘சவரக்கத்தி’ படத்தின் படப்பிடிப்பை நடத்தி வந்தார்.
‘சவரக்கத்தி’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, படம் பஸ்ட் காப்பி தயாராகிவிட்டாலும், படம் வியாபாரம் ஆகாமல் கிடப்பில் கிடந்தது. மிஷ்கினும் என்ன என்னவோ செய்தும், யார் யாரை பார்த்தும் எதுவும் எடுபடமால் போய்விட்டது. படத்தை வாங்க வருபவர்கள் போடும் கண்டிஷனுக்கு மிஷ்கின் ஒத்துபோகாமல் இருப்பதும், மிஷ்கின் போடும் கண்டிஷனுக்கு படத்தை வாங்க நினைப்பவர்கள் ஒத்துபோகாததும் ஒரு காரணமாக கூறப்பட்டது.
முதல் படமே இப்படி முடங்கிவிட்டதால் மிஷ்கினின் தம்பி இயக்குநர் ஆதித்யா ரொம்ப அப்செட்டானதோடு, அண்ணன் மீது கோபமும் கொண்டாராம். தம்பியின் கோபத்தை உணர்ந்த மிஷ்கின் ஒரு வழியாக, படத்தை எந்தவித கண்டிஷனும் போடாமல் விற்க முன்வந்துவிட்டாராம். அதன்படி, தற்போது ‘சவரக்கத்தி’ படத்தை வாங்கி வெளியிடும் நிறுவனம், படம் வெற்றி பெற்றால் தான் அதற்கான தொகையை தருவதாக ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், முன்னணி ஹீரோவை வைத்து தான் இயக்கிய படம் மூலம் மிஷ்கின் சம்பாதித்த பணத்தை தனது தம்பியை இயக்குநராக்குவதற்காக இழந்துவிட்டு வெறும் கையோடு இருக்கிறாராம்.
‘சவரக்கத்தி’ வெற்றி பெற்று ஓடினால் மட்டுமே போட்ட பணத்தை பார்க்க முடியும் என்ற இக்கட்டான சூழ்நிலையில் மிஷ்கின் இருக்க, அவரது படத்திற்கு போட்டியாக, நட்சத்திர பட்டாளத்தைக் கொண்ட கமர்ஷியல் படம் ஒன்று வெளியாவதால், அவர் இன்னும் கலக்கம் அடைந்துள்ளாராம். ஒரு இயக்குநராக போல்டாக பேசும் மிஷ்கின், தயாரிப்பாளராக தற்போது ரொம்பவே தடுமாற்றத்துடன் காணப்படுகிறாராம்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...