நடிகை தேவயானி இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். அவர்களுக்கு இரண்டு மகள் இருக்கிறார்கள். திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வந்த தேவயானி, டிவி சீரியல்கள் மற்றும் திரைப்படங்கள் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். இதற்கிடையே, அவருக்கு டிவி மற்றும் சினிமா என்று இரண்டிலும் வாய்ப்புகள் குறைந்ததால், பள்ளி ஒன்றில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வருவதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், மீண்டும் திரைப்படங்களில் நடிக்க தொடங்கியுள்ள தேவயானி, ‘களவாணி மாப்பிள்ளை’ என்ற படத்தில் அட்ட கத்தி தினேஷுக்கு மாமியார் வேடத்தில் நடிக்கிறார். இதில் ஹீரோயினாக அதிதி மேனன் நடிக்கிறார்.
மறைந்த பிரபல இயக்குநர் மணிவாசகத்தின் மகன் காந்தி மணிவாசகம் ‘களவாணி மாப்பிள்ளை’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர், ரேனிகுண்டா பன்னீர் செல்வத்திடமும் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.
வரும் பிப்ரவரி 15 ஆம் தேதி முதல் படப்பிடிப்பு தொடங்க உள்ள இப்படத்தில் தேவயாணி மாமியார் வேடத்தில் நடிப்பது சஸ்பென்ஸாக வைத்திருந்த நிலையில், அது இன்று கசிந்துள்ளது. தேவயானி மாமியாராகவும், அவரது மாப்பிள்ளையாக தினேஷ் நடிக்க, இவர்களுக்கு இடையே நடக்கும் விஷயங்கள் தான் படத்தை நகர்த்திச் செல்லுமாம். இருந்தாலும், ‘மாப்பிள்ளை’, ‘பூவா தலையா’ போன்ற படங்களின் சாயல் இல்லாமல், திரைக்கதையை வேறு ரூட்டில் இயக்குநர் காந்தி மணிவாசகம் கையாண்டுள்ளாராம்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...