ஸ்ரீ வராகி அம்மன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் படம் ‘சிவா மனசுல புஷ்பா’. திமுக பாராளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா மற்றும் அதிமுக பாராளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா, இவர்களுக்கு இடையே இருக்கும் உறவை மையமாக வைத்து உருவாகும் இப்படம் பெரும் எதிரப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தை இயக்கும் வராகி ஹீரோவாகவும் நடிக்கிறார். இப்படத்தின் போஸ்டர்களும், தலைப்பும் ஏற்கனவே அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்த, நேற்று நடைபெற்ற இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வராகி, விஷால் தலைமையிலான நடிகர் சங்க நிர்வாகிகள் மீது வைத்த குற்றச்சாட்டு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று நடைபெற்ற ‘சிவா மனசுல புஷ்பா’ பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகரும், முன்னாள் எம்.பி-யுமான ஜே.கே.ரித்திஷ், எஸ்.வி.சேகர், தயாரிப்பாளர்கள் சுரேஷ் காமாட்சி, கே.ராஜான் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டார்கள். நிகழ்ச்சியில் நலிவடைந்த கலைஞர்கள் 100 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் நிதி உதவி வழங்கப்பட்டது. இதற்காக முழு தொகையையும் ஜே.கே.ரித்தீஷ் ஏற்றுக்கொண்டதாக வராகி தெரிவித்தார். மேலும், வாய்ப்பு இல்லாமல் இருக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இப்படத்தில் வாய்ப்பு கொடுத்ததோடு, வராகி தொடர்ந்து தயாரிக்க உள்ள படங்களிலும், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு வாய்ப்பு தருவதாக கூறினார்.
நிகழ்ச்சியில் பேசிய வராகி, “ஏற்கனவே இருந்த நடிகர் சங்க நிர்வாகிகள் தவறு செய்ததால் தான், விஷால் தலைமையிலான அணிக்கு ஆதரவு தெரிவித்து வெற்றி பெற வைத்தோம். ஆனால், தற்போது விஷால் தலைமையிலான அணியினர் நடிகர் சங்கத்தை வைத்து கோடி கோடியாய் சம்பாதிக்கிறார்கள். அவர்கள் செய்யும் ஊழல் குறித்த அனைத்து ஆதாரங்களும் என்னிடம் இருக்கிறது. அது குறித்து நான் பல முறை அண்ணன் ரித்தீஷிடம் சொல்லியிருக்கிறேன், முதல் அதை அவர் நம்பவில்லை, தற்போது அவரும் விஷால் மற்றும் அவர்களது அணி பற்றி தெரிந்துக் கொண்டார்.
சமீபத்தில் நடைபெற்ற மலேசிய கலை நிகழ்ச்சியில் கூட விஷால் தரப்பு பேரம் பேசினார்கள். அதற்கான வீடியோ ஆதாரம் என்னிடம் இருக்கிறது. இது சும்மா டிரைலர் தான், இன்னும் அவர்கள் செய்த ஊழல் குறித்த முக்கியமான ஆதாரங்களை வெளியிடுவேன். விஷால் தரப்பு மலேசியாவில் யாரிடம் பேரம் பேசினார்கள், எவ்வளவு தொகைக்கு பேரம் பேசினார்கள், என அனைத்தையும் வெளியிடுவேன்.
அரசியல்வாதிகள் தான் ஏமாற்றுகிறார்கள், பொய் சொல்கிறார்கள் என்றால் நடிகர்களும் அவர்களைப் போல தான் இருக்கிறார்கள். இதில், இவர்கள் எல்லாம் அரசியலுக்கு வருவதாக வேறு சொல்கிறார்கள், அப்படி வந்தால் நாடு என்னத்துக்கு ஆகும் என்று நீங்களே யோசியுங்கள்.” என்று கூறினார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...