பிரபல ஆபாச பட நடிகையான சன்னி லியோன், தற்போது பாலிவுட் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதனால் அவர் இந்தியாவில் முகாமிட்டுள்ளார். பாலிவுட் படங்களில் கசர்ச்சி வேடங்களில் நடித்து வருபவர், ‘வடகறி’ என்ற தமிழ்ப் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடினார்.
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகும் ‘வீரமாதேவி’ என்ற படத்தில் சன்னி லியோன் ஹீரோயினாக நடிக்கிறார். தமிழ்த் திரைப்பட இயக்குநரான வடிவுடையான் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு, சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லியில் இருக்கும் ஸ்டுடியோ ஒன்றில் விரைவில் தொடங்க உள்ளது.
இந்த நிலையில், ‘வீரமாதேவி’ படத்தில் சன்னி லியோன் நடிப்பதற்கும், அவர் படப்பிடிப்பில் கலந்துக் கொள்வதற்கு தடை விதிக்க கோரி சென்னை போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குழந்தைகள், பெண்களுக்கு நடக்கும் பாலியல் தொல்லைகளுக்கு எதிராகவும், ஆபாச படங்களை இணையத்தில் வெளியிடுவதற்கு எதிராகவும் போராடும் சமூக ஆர்வலரான எமி என்ற இனோச் மோசஸ், அளித்த புகார் மனுவில், “பூந்தமல்லியை அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான படப்பிடிப்பு தளத்தில் நடைபெறும் ‘வீரமாதேவி’ படப்பிடிப்பில் கவர்ச்சி நடிகை சன்னிலியோன் கலந்து கொள்ள உள்ளார். இதுகுறித்து அந்த பகுதியில் விளம்பரப்படுத்தப்பட்டு உள்ளது. சன்னிலியோன் இணையதளத்தில் வெளியாகும் ஆபாச படங்கள் குழந்தைகள் மனதை கெடுக்கும் வகையில் உள்ளது. ‘வீரமாதேவி’ படம் தமிழ் கலாசாரத்தை சொல்லும் படம் என்று கூறப்படுகிறது.
கவர்ச்சியாக நடிக்கக்கூடிய சன்னிலியோன் படப்பிடிப்பில் கலந்து கொண்டால் கவர்ச்சியாக நடிப்பார். அதை காண அங்கு அதிக அளவில் இளைஞர்கள் கூடுவார்கள் எனவே இந்த படப்பிடிப்பில் சன்னிலியோன் கலந்து கொள்ள தடைவிதிக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...