ரஜினிகாந்த் - பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படம் ‘காலா’ என்பதால் ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி ‘காலா’ ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
’காலா’ மற்றும் 2.0’ என்று ரஜினிகாந்த் இரண்டு படங்களிலும் நடித்து முடித்துவிட்டார். இரு படங்களின் படப்பிடிப்பு முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இதில், ‘2.0’ படம் தான் முதலில் ரிலீஸ் ஆகும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் முடிவதற்கு மேலும் சில மாதங்கள் ஆகும் என்பதால், ரிலிஸ் தேதியை தயாரிப்பு தரப்பு தள்ளி வைக்க முடிவு செய்தது.
இந்த நிலையில், ‘காலா’ வை முதலில் ரிலீஸ் செய்துவிடலாம் என்று ரஜினிகாந்த் திட்டமிட்டுள்ளதாகவும், அதன்படி ஏப்ரல் 13 ஆம் தேதி காலா ரிலீஸ் ஆகும் என்றும் தகவல் வெளியான நிலையில், இன்று காலா ரிலீஸ் தேதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படும் என்று தனுஷ் ட்விட்டரில் தெரிவித்தார்.
அதன்படி, சரியாக 7 மணிக்கு காலா படம் வரும் ஏப்ரல் 27 ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று நடிகர் தனுஷும், அவரது தயாரிப்பு நிறுவனமான வுண்டார் பார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
@superstarrajini 's #Kaala release on April 27th @beemji @dhanushkraja @RIAZtheboss pic.twitter.com/pLAUQOOFsD
— CinemaInbox (@CinemaInbox) February 10, 2018
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...