சென்சார் விதிகளை தாண்டி வரும் படங்கள் சில வெட்டுக்களையும், பல மியூட்களையும் முதுகில் சுமந்துக்கொண்டு தான் வெளியாகிறது. சென்சாரைப் பொருத்தவரை அவர்கள் பார்வையிலும், அரசியல் அதிகாரமிக்கவர்களைப் பாதிக்காத வகையிலும் இருந்தால் பிரச்சினையில்லை, சான்றிதழ் எளிதாகக் கிடைத்துவிடும்.
கொஞ்சம் சமூகப்பிரச்சினைகள், கிளாமர் உள்ள படங்கள் திணறத்தான் செய்கின்றன. அப்படி திணறி வர முடியாமல் போன படம் தான் ‘எக்ஸ் சோன்’ என்ற பெயரில் சென்சாருக்கு வந்த இந்திப் படம்.
மேல் முறையீடு வரை சென்றும் கடைசி வரை வெளிவர முடியாமலே போய்விட்டது. ஆனால், இப்போது எக்ஸ் வீடியோஸ் என்ற படத்திற்கு ஏ சான்றிதழும், சென்சார் போர்டு பெண் உறுப்பினர்களிடம் இருந்து பாராட்டும் கிடைத்திருப்பது, இந்தி திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
எக்ஸ் வீடியோஸ் படம் தமிழ் மற்றும் இந்தி மொழிகளில் தயாராகியுள்ளது. இயக்குநர் ஹரியின் உதவியாளர் சஜோ சுந்தர் இயக்கியுள்ள இப்படத்தில் அஜய்ராஜ், பிரபுஜித், ஆஹிருதி சிங், ரியாமிக்கா, ஷான் ஆகியோர் நடித்துள்ளனர். கலர் ஷாடோஸ் எண்டெர்டெய்ன்மெண்ட் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
எக்ஸ் சோனுக்கு கிடைக்காத சான்றிதழ் எக்ஸ் வீடியோஸுக்கு கிடைத்தது எப்படி? என்பது குறித்து இயக்குநர் சஜோ சுந்தரைக் கேட்டதற்கு, “நான் மையப்படுத்தியிருப்பது பெண்களின் பாதுகாப்பு குறித்த கருத்துகளை... வெறுமனே உடலைக் காட்டி பணம் பண்ண எடுக்கப்பட்ட படம் அல்ல இது. படத்திற்கு வைக்கப்பட்ட தலைப்பு வேண்டுமானால் ஆபாச படங்கள் கொண்ட தளத்தின் பெயரில் இருக்கலாம். ஆனால் குறிப்பாக சொல்லப்போனால் அந்த தளத்திற்கே ஆப்பு வைக்க எடுக்கப்பட்ட படம் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
அழகான பெண்களின் உடலமைப்பை குறிவைக்கும் ஆண்ட்ராய்ட் மாஃபியாவுக்கு எதிரான படம் இது. இந்த படத்தை சென்சார் போர்டிலுள்ள பெண் உறுப்பினர்களும் பார்த்தார்கள்.
இன்று அவசியம் சொல்லப்படவேண்டிய கருத்துள்ள முக்கியமான படம் இது என்று பாராட்டினார்கள். எக்ஸ் சோன் என்ன கதையம்சத்தோடு எடுக்கப்பட்ட படம் என்பது எனக்குத் தெரியாது. பண்பாடு, கலாச்சாரதிற்கு ஏற்ப ஒரு படம் எடுக்கப்பட்டிருந்தால் அதற்கு ஏன் தடை வரப்போகிறது?
அதனால் எக்ஸ் சோன் படத்தை எக்ஸ் வீடியோஸ் படத்தோடு ஒப்பிட்டு சென்சாரைக் குறை சொல்ல வேண்டாம்.
நான் தேவைப்படும் இடங்களில் மட்டுமே கிளாமர் வைத்துள்ளேன். அது படம் பார்க்கும் யாருக்கும் தவறாகத் தெரியாது என்று மட்டுமில்லாமல், சரியாகத் தானே சொல்லியிருக்கிறார்கள் என்றும் தோன்றும். ” என்று தெரிவித்தார்.
எக்ஸ் வீடியோஸ் விரைவில் இந்தி, தமிழில் இரண்டு மொழிகளில் வெளியாக இருக்கிறது..
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...