தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் பிரபல இசையமைப்பாளர்களின் பட்டியலில் இடம் பிடித்த அனிருத், விஜய், அஜித் என முன்னணி ஹீரோக்களின் பேவரைட் இசையமைப்பாளராகியுள்ளார்.
அனிருத் பாடல்களுக்காகவே சில படங்கள் வெற்றிப் பெற்று வருவதால், இளம் ஹீரோக்கள் அனிருத் தங்களது படங்களுக்கு இசையமைக்க வேண்டும், என்று விருப்பம் தெரிவித்து வருவதால், அனிருத் படு பிஸியான இசையமைப்பாளராகியுள்ளார். இந்த பிஸியிலும் அவ்வபோது தனி இசை பாடல்களையும் வெளியிட்டு வரும் அனிருத், வரும் காதலர் தினத்தன்று ‘ஜூலி’ என்ற சிங்கிள் டிராக் இசை ஆல்பத்தை வெளியிட உள்ளார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன், எழுதியிருக்கும் அந்த பாடலை அனிருத் இசையமைத்து பாடியிருக்கிறார். சோனி மியூசிக் நிறுவனம் வெளியிடும் இந்த பாடல்கள் வெளியாவதற்கு முன்பாக ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி தனி இசை பாடல்களை அனிருத் வெளியிடுவது புதிதானது அல்ல, அவர் ஏற்கனவே, “எனக்கென யாரும் இல்லையே”, “அவளுக்கென்ன”, “ஒன்னுமே ஆகல” போன்ற காதல் பாடல்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...