இயக்குநர் சிறுத்தை சிவாவுடன் தொடர்ந்து நான்காவது முறையாக அஜித் இணைந்திருப்பது அவரது ரசிகர்களுக்கு சற்று கலக்கத்தைக் கொடுத்தாலும், படத்தின் கதைக்களம் மற்றும் அஜித்தின் லுக் போன்றவற்றால் சற்று ஆறுதலும் அளித்துள்ளது.
படப்பிடிப்பு ஆரம்பிப்பதற்கு முன்பாகவே ‘விஸ்வாசம்’ என்று படத்தின் தலைப்பை அறிவித்து ரசிகர்களை உற்சாகப்படுத்திய தயாரிப்பு தரப்பு, ஹீரோயினாக நயந்தாராவையும், இசையமைப்பாளராக டி.இமானையும் ஒப்பந்தம் செய்து மேலும் ரசிகர்களை குஷியடையச் செய்துள்ளது.
’விஸ்வாசம்’ படத்தின் படப்பிடிப்பு பிப்ரவரி 22 ஆம் தேதி தொடங்க இருப்பதாக ஒரு தரப்பு கூறி வரும் நிலையில், ஏற்கனவே படப்பிடிப்பு தொடங்கி விட்டதாகவும் தகவல்கள் கசிந்துக் கொண்டிருக்கிறது. வட சென்னை போன்ற செட் போடப்பட்டு அதில் தற்போது அமைதியான முறையில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில், ‘விஸ்வாசம்’ படத்திற்குப் பிறகு விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருப்பதாகவும், அதற்கான கதையை அவர் ஓகே செய்துவிட்டதாகவும் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது விஜய்க்கு மாஸ் ஹிட் கொடுத்த இயக்குநரின் படத்தில் அஜித் அடுத்ததாக நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
ஆம், விஜய்க்கு ‘போக்கிரி’ என்ற மாஸ் ஹிட் கொடுத்த பிரபு தேவா, சமீபத்தில் அஜித்தை சந்தித்து கதை ஒன்றை கூறினாராம். அஜித்துக்கும் அந்த கதை பிடித்துவிட்டதால், நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டாராம். தற்போது நடிப்பதில் தீவிரம் காட்டி வரும் பிரபு தேவா, அஜித்தை இயக்க வேண்டும், என்று நீண்ட நாட்களாக ஆசைப்பட்டுக் கொண்டிருந்தாராம். ஆனால், அது கைகூடி வரும் நிலையில் தான் அவர் ஹீரோவாக நடித்த படம் வெற்றி பெற்றதால், தொடர்ந்து அவர் நடிப்பதில் கவனம் செலுத்தி வரும் சூழல் ஏற்பட்டதால், அஜித்தை இயக்க முடியாமல் போய்விட்டதாம்.
தற்போது, அஜித்திடம் தனது கதையை சொல்ல பிரபு தேவாவுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்க, அதை பயன்படுத்தி தனது கதையை சொல்லியிருக்கிறார். அஜித்துக்கும் கதை பிடித்துவிட்டதோடு, பிரபு தேவா இந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் இயக்குநராக பல வெற்றிப் படங்களைக் கொடுத்திருப்பதாலும், அவரது படங்கள் ரசிகர்களை கவரும் விதத்தில் இருப்பதாலும், சம்மதம் சொல்லிவிட்டதாக கூறப்படுகிறது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...