உள்ளங்கையில் உலகத்தை வைத்திருப்பது போல தான் ஆகிவிட்டது செல்போன் வைத்திருப்பவர்களின் நிலை. அந்த அளவுக்கு தொழில்நுட்பத்தின் உச்சமாக மாறியுள்ள செல்போனை பேசுவதற்கு மட்டும் இன்றி, பலவற்றுக்காக மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். சிலர் நல்ல மனபான்மையுடன் செல்போனை பயன்படுத்தினாலும், சிலரோ தவறான மனப்பான்மையுடனும் பயன்படுத்துவது அதிகரித்துக் கொண்டு தான் வருகிறது. அப்படிப்பட்ட செல்போன் தவறுதலாகத் தொலைந்து விட்டால், வேறு எவரும் தகவல்களை அறிந்து கொள்ளக் கூடாது என்று எல்லாவற்றையும் ‘லாக்’ செய்து வைத்திருப்பார்கள் . அதில் பாஸ்வேர்டு தெரிந்த செல்போனை உரிமையாளர் தவிர வேறு யாரும் பயன்படுத்த முடியாதபடி கால் செய்யும் வசதியையும் லாக் செய்திருப்பார்கள்.
மொபைல் வைத்திருக்கும் உரிமையாளருக்கு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்து அவருக்கு உதவும் எண்ணத்தில் மொபைல் போனை எடுத்து தொடர்பு கொள்ள முயன்றால் அது லாக் ஆகியிருக்கும். இதனால் சம்பந்தப்பட்டவர் வீட்டுக்கு தொடர்பு கொள்ள முடியாது. சில நேரம் அவர் யாரென்று தெரியாமல் அவரது உயிரைக் காப்பாற்றக்கூட முடியாமல் போய் விடும். இப்படிப்பட்ட கருத்தை மையமாக வைத்துத்தான் 'அன்லாக்' குறும்படம் எடுக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை இயக்கியிருப்பவர் மாஸ் ரவி. இவர் திரைப்பட நடிகர் .அண்மையில் வெளிவந்த விக்ரமின் ' ஸ்கெட்ச் ' படத்தில் கூட முக்கியமான வேடமேற்று நடித்துள்ளார். இசை - கிறிஸ்டி, ஒளிப்பதிவு - சரண் மணி, படத்தொகுப்பு - ஸ்ரீ ராஜ் குமார், டிசைன் - சரத்குமார், இனை தயாரிப்பு - பூபாலன். லைக் அண்ட் ஷேர் மீடியா சார்பில் இதைத் தயாரித்து இருப்பவர் பிரபல மக்கள் தொடர்பாளர் சக்தி சரவணன்.
இக்குறும்படத்தில் மாஸ் ரவி, நடிகர் நாகா, நடிகர் ஆல்வின், சக்தி சரவணன், பாண்டியன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சென்னை நகரின் ஜன சந்தடியுள்ள போக்குவரத்து நெருக்கம் உள்ள இடங்களில் சிரமப்பட்டுப் படப்பிடிப்பு நடத்தியுள்ளனர்.
சில நிமிடங்கள் ஓடும் 'அன்லாக்' குறும்படம் பார்ப்பவர்களை நெடுநேரம் யோசிக்க வைக்கும். செல்போனில் எதை மூடி வைக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு ஊட்டும். இதை படிப்பினையூட்டும் குறும்படம் என்றும் கூறலாம்.
'அன்லாக் 'குறும்படத்தின் பர்ஸ்ட் லுக் கை 'ஸ்கெட்ச்' படத்தின் இயக்குநர் விஜய் சந்தர் வெளியிட்டார்.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில், ஜெயம் ரவி, நித்யா மேனன் நடிப்பில் உருவாகியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ திரைப்படம் பொங்கல் வெளியீடாக வரும் ஜனவரி 14 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது...
சென்னை புரொடக்ஷன்ஸ் சார்பில் எழில் இனியன்...
கேஜிஎஃப் மூலம் இந்தியத் திரையுலகைத் திரும்பிப் பார்க்க வைத்து, புதிய சரித்திரம் படைத்த, ராக்கிங் ஸ்டார் யாஷ், ஜனவரி 8 ஆம் தேதி 39 வது பிறந்தநாளைக் கொண்டாடினார்...